(1042)

(1042)

தூணாயதனூ டரியாய் வந்துதோன்றி *

பேணா வவணனுடலம் பிளந்திட்டாய்! *

சேணார் திருவேங்கட மாமலைமேய *

கோணாகணையாய்! குறிக்கொள்ளெனைநீயே.

பதவுரை

தூணாயதனூடு

வெறும் தூணாகவேயிருக் கிறவதற்குள்ளே

அரி ஆய்

நரஸிம்ஹமாகி

வந்து தோன்றி

திருவவதரித்து,

பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்

(தன்னை) மதியாத ஹிரண்ய கசிபுவின் சரீரத்தைக் கிழித்துப் போகட்டவனே!

சேண் ஆர்

மிக்க உயர்த்தி பொருந்திய

திரு வேங்கடம் மா மலை மேய

திருமலையிலே எழுந்தருளியிருப்பவனும்

கோள் நாகம் அணைபாய்

மிடுக்கையுடைய திருவனந்தாழ்வானைப் பள்ளியாகவுடையனுமான பெருமானே!

எனை

அடியேனை

நீயே குறிக்கொள்

நீயாகவே திருவுள்ளம் பற்றியருளவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

#1042:

தூண் ஆய் அதனூடு அரியாய், வந்து தோன்றி,

பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!

சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய

கோள் நாகணையாய்! குறிக்கொள் எனை நீயே. [1-10-5]

 

        ***-[தூணாயதனூடு.] பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவைஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன் மீதும் அருள் செய்யவேணு மென்கிறார்.

        “தூணூடு அரியாய் வந்து தோன்றி” என்னுமளவே போதுமாயிருக்க, தூணாயதனூடு = தூணாயிருக்கிற வஸ்துவினுள்ளே’ என்று சொல்லுகைக்குக் கருத்து என்னென்னில்; ‘முன்பே நரஸிம்ஹத்தை உள்ளே அடக்கி வைத்துக் கட்டின கம்பமிது’ என்று சொல்லவொண்ணாதபடி வெறும் தூணானவதனுள்ளே என்பதாம். அரி-சிங்கம், பேணா அவுணன் – ஸர்வேச்வரனை மதியாத இரணியன் என்றும், பாகவத சிகாமணியான ப்ரஹ்லாதனை மதியாத இரணியன் என்றும் உரைக்கலாம்.

 

        சேண் = அகலம், ஆகாசம், உயர்ச்சி, தூரம், நீளம். கோள்நாகணையாய்! கோள் – மிடுக்கு; திருவனந்தாழ்வானுக்கு மிடுக்காவது – சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம்” என்றபடி பலவகையடிமைகளுக்கும் உரிய வடிவங்களைக் கொள்ளுதற்குப் பாங்கானசக்தி. குறிக்கொள் – ஓரடியானுமுளனென்று திருவுள்ளத்தில் வைத்திரு என்றபடி. திருவனந்தாழ்வானைப் போலே என்னையும் அத்தாணிச் சேவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ளாய் என்பது உள்ளுறை. …… …. …. …. ….. …… (5)

 

English Translation

 

O Serpent-reclining Lord, Resident of Venkatam hills rising high! You appeared as a man-lion froin out of a pillar, and split the mig’hty chest of the haughty Hiranya. Pray take notice of me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top