(1040)

(1040)

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு *

ஏரால மிளந்தளிர்மேல் துயிலெந்தாய்! *

சீரார் திருவேங்கட மாமலை மேய *

ஆராவமுதே! அடியேற் கருளாயே.

பதவுரை

நீர் ஆர் கடலும்

நீர் நிரம்பியிருக்கிற கடலையும்

நிலனும்

பூமியையும்

முழுது

மற்றுமுள்ள எல்லாவற்றையும் (பிரளயம் கொள்ளாதபடி)

உண்டு

அமுது செய்து

ஏர்

அழகியதும்

இள

இளையதுமான

ஆலந்தளிர் மேல்

ஆலந்தளிரின் மேலே

துயில்

திருக்கண்வளர்ந்தருளின

எந்தாய்

ஸ்வாமியே!,

சீர் ஆர்

சிறப்புப் பொருந்திய

திருவேங்கடம் மா மலை மேய

திருமலையிலே எழுந்தருளியிருக்கிற

ஆரா அமுதே

ஆராவமுதமான எம்பெருமானே!

அடியேற்கு அருளாய்

அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

 

#1040:

நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு ,

ஏர் ஆலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய்!

சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய

ஆரா அமுதே! அடியேற்கு அருளாயே. [1-10-3]

 

        * * *[நீரார்கடலும்.] மற்ற பேர்களை ரக்ஷிக்க நான் சக்தனாயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரக்ஷித்தல் எனக்கு எளிதன்றே; இஃது அருமையான காரியமாயிற்றே!’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக; பிரளய காலத்திலே கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்திட்டு இளையதொரு ஆலந்தளிரின் மேலே திருக்கண்வளர்ந்தருளின அகடி தகடநா ஸமர்த்தனான உனக்கு அரிதான காரியமும் உண்டோ ? எல்லாம் எளிதேகாண் என்பார் போல வடதள சாயி விருத்தாந்தத்தை ப்ரஸ்தாவிக்கிறார். அந்த சக்தி விசேஷ மெல்லாந் தோற்றத் திருமலையிலே ஸேவைஸாதிக்கின்ற என் ஆராவமுதமே! அருள் புரியாய் என்கிறார் …… … (3)

English Translation

Insatiable ambrosial Resident of the great and wealthy Venkatam hills! You swallowed the Earth, the ocean and all else, and slept as a child on a fig leaf! Pray grace me, your servant.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top