10 – 3 ஏத்துகின்றோம்

மூன்றாந் திருமொழி

(1868)

ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன் திருநாமம்

சோத்தம் நம்பீ. சுக்கி ரீவா உம்மைத் தொழுகின்றோம்

வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே

கூத்தர் போல ஆடு கின்றோம் குழமணி தூரமே.

விளக்க உரை

(1869)

எம்பி ரானே என்னை யாள்வாய் என்றென் றலற்றாதே

அம்பின் வாய்ப்பட் டாற்ற கில்லா திந்திர சித்தழிந்தான்

நம்பி அனுமா சுக்கி ரீவ அங்கத னே நளனே

கும்ப கர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே.

விளக்க உரை

(1870)

ஞால மாளு முங்கள் கோமான் எங்கள் இரவணற்குக்

கால னாகி வந்த வாகண் டஞ்சிக் கருமுகில்போல்

நீலன் வாழ்கசு டேணன் வாழ்க அங்கதன் வாழ்கவென்று

கோல மாக ஆடு கின்றோம் குழமணி தூரமே.

விளக்க உரை

(1871)

மணங்கள் நாறும் வார்குழ லார்கள் மாதர்க ளாதரத்தை

புணர்ந்த சிந்தைப் புன்மை யாளன் பொன்ற வரிசிலையால்

கணங்க ளுண்ண வாளி யாண்ட காவல னுக்கிளையோன்

குணங்கள் பாடி யாடு கின்றோம் குழமணி தூரமே.

விளக்க உரை

(1872)

வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக

இன்று தம்மி னெங்கள் வாணாள் எம்பெரு மான்தமர்காள்

நின்று காணீர் கண்க ளார நீரெமைக் கொல்லாதே

குன்று போல ஆடு கின்றோம் குழமணி தூரமே.

விளக்க உரை

(1873)

கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து,இலங்கை

அல்லல் செய்தா னுங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து

வெல்ல கில்லா தஞ்சி னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா,

கொல்ல வேண்டா ஆடு கின்றோம் குழமணி தூரமே.

விளக்க உரை

(1874)

மாற்ற மாவ தித்த னையே வம்மின் அரக்கருளீர்

சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே

ஆற்றல் சான்ற தொல்பி றப்பில் அனுமனை வாழ்கவென்று

கூற்ற மன்னார் காண ஆடீர் குழமணி தூரமே.

விளக்க உரை

(1875)

கவள யானை பாய்புர வித்தே ரோட ரக்கரெல்லாம்

துவள, வென்ற வென்றி யாளன் றன்தமர் கொல்லாமே

தவள மாடம் நீட யோத்தி காவலன் றன்சிறுவன்

குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே.

விளக்க உரை

(1876)

ஏடொத் தேந்தும் நீளி லைவேல் எங்கள் இரவணனார்

ஓடிப் போனார், நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால்

சூடிப் போந்தோம் உங்கள் கோம னாணை தொடரேன்மின்

கூடி கூடி யாடு கின்றோம் குழமணி தூரமே.

விளக்க உரை

(1877)

வென்ற தொல்சீர்த் தென்னி லங்கை வெஞ்சமத்து

அன்றரக்கர் குன்ற மன்னா ராடி உய்ந்த குழமணி தூரத்தை

கன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை

ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் படிநின் றாடுமினே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top