(1877)

(1877)

வென்ற தொல்சீர்த் தென்னி லங்கை வெஞ்சமத்து

அன்றரக்கர் குன்ற மன்னா ராடி உய்ந்த குழமணி தூரத்தை

கன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை

ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் படிநின் றாடுமினே.

 

பதவுரை

தொல்

நெடுநாளாக

வென்றி சீர்

வெற்றியையே இயல்பாக வுடைத்தாயிருந்த

தென் இலங்கை

தென்னிலங்கையில்

வெம் சமத்து

வெவ்வியபோர்க்களத்திலே

அன்று

அப்போது

அரக்கர்

ராக்ஷஸர்கள்

குன்றம் அன்னார்

மலைபோன்றவர்களாக

ஆடி உய்ந்த குழமணி தூரத்தை

குழமணிதூரக்கூத்தாடி உயிர் தப்பினபடியைக் குறித்து,

கன்றி நெய் நீர் நின்ற வேல் கை

சினக்குறிப்புடன் கூடிய தாய் நெய்யிட்டிருப்பதை நீர்மையாகவுடைத்தாய் நின்ற வேற்படையைக் கையிலுடையரான

கலியன்

திருமங்கையாழ்வார்

ஒலி

அருளிச்செய்த

மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும்

சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்

பாடி நின்று

பாடிக்கொண்டு

ஆடுமின்

(ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடுங்கோள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஏத்துகின்றோம் எம்பிரானே ஞாலம் மணங்கள் வென்றி கல்லின் மாற்றம் கவளம் எடு வென்ற சந்தம்.

 

English Translation

This garland of ten ;kulamani Duram; songs by the greased-spear-wielding kaliy an sing of the surrender-dance of the huge-bodied Rakshnasas in the Victorious battlefield of Lanka in the yore. Devotees! Sing and dance thses songs

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top