(1873)

(1873)

கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து,இலங்கை

அல்லல் செய்தா னுங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து

வெல்ல கில்லா தஞ்சி னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா,

கொல்ல வேண்டா ஆடு கின்றோம் குழமணி தூரமே.

 

பதவுரை

(வானர முதலிகான்!)

உங்கள் கோமான்

–

உங்களுக்குத் தலைவரான ஸ்ரீராமபிரான்,

கல்லில்

–

மலைகளைக்கொண்டு

முந்நீர்

–

கடலை

மாற்றி வந்து

–

(அணைகட்டித்) தகைந்து

இலங்கை

–

லங்கையிலுள்ள

காவல்

–

அரண்களையும்

கடந்து

–

அதிக்ரமித்து

எம்மை

–

எங்களை

அமர் களத்து

–

யுத்தபூமியிலே

அல்லல் செய்தான்

–

மிகவும் துன்பங்களுக்கு ஆளாக்கினார்

வெம் கதிரோன் சிறுவர்

–

ஸூர்ய புத்திரனான ஸுக்ரீவனே!

வெல்ல கில்லாது

–

(உங்களை) ஜயிக்க மாட்டாமல்

அஞ்சினோ

–

பயப்படுகின்றோம்

கொல்ல வேண்டா

–

எங்களைக் கொல்லாதொழிய வேணும்

குழமணிதூரம் ஆடுகின்றோம் காண்

 

English Translation

Your Lord made a bridge of rocks and crossed over to Lanka, then shattered the bastions and entered the city, engaged us in a battle and routed us. O Son of the Sun Sugrival Look, we have conceded our defeat, Pray do not kill us. We are frightened. we dance the kulamani Duram

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top