(2741)
துன்னு வெயில்வறுத் த வெம்பரமேல் பஞ்சடியால், மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,
அன்ன நடைய அணங்கு நடந்திலளே
(2742)
பின்னும் கருநெடுங்கண் செவ்வாய்ப் பிணைநோக்கின்,
மின்னனைய நுண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும் கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது,
தன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங் கன்னவனை நோக்கா தழித்துரப்பி, – வாளமருள்
(2743)
கல்னவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய், பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே பூங்கங்கை
(2744)
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும் கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,
தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை, பன்னாக ராயன் மடப்பாவை, – பாவைதன்
(2745)
மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல, தன்னுடைய கொங்கை முகநெரிய, – தான் அவன்றன்
(2746)
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே சூழ்கடலுள்,
(2747)
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன், தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,
கன்னியரை யில்லாத காட்சியாள், – தன்னுடைய
(2748)
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,
மன்னும் மணிவரைத்தோள் மாயவன், – பாவியேன்
(2749)
என்னை இதுவி ளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,
மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய், கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ,
மன்னிய பேரின்பம் எய்தினாள் மற்றிவைதான்
(2750)
என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன்,
மன்னும் மலையரயன் பொற்பாவை, – வாணிலா