(2518)
என்றும்புன் வாடை யிதுகண் டறிதும் இவ் வாறுவெம்மை
ஒன்றுமுருவும் சுவடும் தெரியிலம் ஓங்கசுரர்
பொன்றும் வகைபுள்ளை யூர்வான் அருளரு ளாதவிந்நாள்
மன்றில் நிறைபழி தூற்றிநின் றென்னைவன் காற்றடுமே.
(2519)
வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன மண்ணும்விண்ணும்
என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்த வென்பால் எம்பிரான தடங்கண்களே.
(2520)
கண்ணும்செந் தாமரை கையு மவைஅடி யோஅவையே,
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று, மதிவிகற்பால்
விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக் குமற்றெப் பால்எவர்க்கும்
எண்ணு மிடத்தது வோஎம்பி ரான தெழில்நிறமே?
(2521)
நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும்
பெறமுயன் றாரில்லை யால்எம்பி ரான்றன் பெரு மையையே.
(2522)
பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
ஒருங் கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவ ர்நம்போல்
வரும்கேழ் பவருளரே? தொல்லை வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறுமே? சொல்லு வாழி மடநெஞ்சமே.
(2523)
மடநெஞ்ச மென்றும் தமதென்றும், ஓர்கரு மம்கருதி,
விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும்அப் பொன்பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்போய்த்
திடநெஞ்ச மாய்எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே.
(2524)
திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து
சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே
சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை
விரிகின் றதுமுழு மெய்யும் என் னாங்கொலென் மெல்லியற்கே
(2525)
மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில்மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகையென் காணும்என் னாலும்தன்னைச்
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன் பல்லியின்
சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே,
(2526)
பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்இப் பாயிருள்போல்
கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண
வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாயமண் ணேரன்ன ஒண்ணுதலே.
(2527)
ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே.