(3629)
வாலிய தோர்கனி கொல்வினை யாட்டியேன் வல்வி னைகொல்,
கோலம் திரள்பவ ளக்கொழுந் துண்டங்கொ லோவறியேன்,
நீல நெடுமுகில் போல்திரு மேனியம் மான்தொண்டைவாய்,
ஏலும் திசையுளெல் லாம்வந்து தோன்றுமென் னின்னுயிர்க்கே.
பதவுரை
|
வாலியது ஒர் கனி கொல் |
– |
விலக்ஷ்ணமாயிருப்ப தொரு பழமோ? |
|
வினையாட்டியேன் வல்வினை கொல் |
– |
இப்பழத்தை இப்போதேய நுபவிக்கப் பெறாத பாவத்தையுடையேனான வென்னுடையவலிய பாவமே ஒரு வடிவு கொண்டதாயிருக்கிறதோ? |
|
கோலம் திரள் |
– |
ஸௌந்தர்யம் ஸௌகுமார்யம் முதலான நலங்களெல்லான் ஒருசேரத்திரண்ட |
|
பவளம் கொழு துண்டம் கொலோ |
– |
பவளத்தினுடைய கொழுவிய தொரு முறியோ? |
|
அறியேன் |
– |
அறிகின்றேனில்லை; |
|
நீலம் நெடு முகில் போல் திருமேனி அம்மான் |
– |
சுறுத்துப் பெருத்த மேகம் போன்ற திருமேனியையுடைய பெருமானது |
|
தொண்டை வாய் |
– |
தொண்டைக் கனியின் நிறத்தையுடைத்தான அதரமானது |
English Translation
Is it a beautiful berry fruit, -the sins of my wicked self?, -Or is it a coral spring of beauty, I know not, The radiant lips of my dark hued Lord appear me everywhere, sweetly to my soul
