(3629)

(3629)

வாலிய தோர்கனி கொல்வினை யாட்டியேன் வல்வி னைகொல்,

கோலம் திரள்பவ ளக்கொழுந் துண்டங்கொ லோவறியேன்,

நீல நெடுமுகில் போல்திரு மேனியம் மான்தொண்டைவாய்,

ஏலும் திசையுளெல் லாம்வந்து தோன்றுமென் னின்னுயிர்க்கே.

 

பதவுரை

வாலியது ஒர் கனி கொல்

விலக்ஷ்ணமாயிருப்ப தொரு பழமோ?

வினையாட்டியேன் வல்வினை கொல்

இப்பழத்தை இப்போதேய நுபவிக்கப் பெறாத பாவத்தையுடையேனான வென்னுடையவலிய பாவமே ஒரு வடிவு கொண்டதாயிருக்கிறதோ?

கோலம் திரள்

ஸௌந்தர்யம் ஸௌகுமார்யம் முதலான நலங்களெல்லான் ஒருசேரத்திரண்ட

பவளம் கொழு துண்டம் கொலோ

பவளத்தினுடைய கொழுவிய தொரு முறியோ?

அறியேன்

அறிகின்றேனில்லை;

நீலம் நெடு முகில் போல் திருமேனி அம்மான்

சுறுத்துப் பெருத்த மேகம் போன்ற திருமேனியையுடைய பெருமானது

தொண்டை வாய்

தொண்டைக் கனியின் நிறத்தையுடைத்தான அதரமானது

 

English Translation

Is it a beautiful berry fruit, -the sins of my wicked self?, -Or is it a coral spring of beauty, I know not, The radiant lips of my dark hued Lord appear me everywhere, sweetly to my soul

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top