(3628)
ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை மீரென்னை நீர்நலிந்தென்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி யோகொழுந் தோ?அறியேன்,
ஈட்டிய வெண்ணெயுண் டாந்திரு மூக்கென தாவியுள்ளே,
மாட்டிய வல்விளக்கின் சுடராய்நிற்கும் வாலியதே.
பதவுரை
|
அன்னைமீர் |
– |
தாய்மார்களே! |
|
நீர் |
– |
நீங்கள் |
|
என்னை ஆட்டியும் தூற்றியும் நின்று |
– |
என்னை யலைத்தும் அலர் தூற்றியும் நின்று |
|
நலிந்து என் |
– |
நலிகிறவிதனால் என்ன பலனுண்டு? |
|
மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ |
– |
(அக்கண்களின்) அருகே ஓங்கியிருப்பதொரு கற்பகத்தினுடைய கொடியோ கொழுந்தோ! |
|
அறியேன் |
– |
அறிகின்றிலேன்; |
|
ஈட்டியவெண்ணெய் உண்டான் திருமூக்கு |
– |
திரட்டி வைத்திருந்த வெண்ணெயை (க்களவு வழியாலே) அமுது செய்த கண்ணனுடைய திருமூக்கானது |
|
எனது ஆவி உள்ளே |
– |
எனது நெஞ்சினுள்ளே |
|
மாட்டிய |
– |
ஏற்றிய |
|
வாலியது வல் விளக்கின் சுடர் ஆய் நிற்கும் |
– |
பெருத்து ஸ்திரமான தீப ஜ்வாலே போலே விளங்காநின்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (ஆட்டியும் தூற்றியும்;.) கண்ணழகு நலிந்தது போராமே மூக்கழகுன் நலியும்படியைச் சொல்லியழுகிறாள். பராங்குசநாயகி எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்ய லாவண்யங்களைச் சொல்லி அடிக்கடி வாய்வெருவுவதுண்டு; செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரையடிக்கள் செம்பொன் திருவுடம்பே என்றும், செக்கமலத்தலர் போலும் கண்கைளால் செங்கனிவாய் அக்கமலத்திலைபோலுந் திருமேனி என்றுமிப்படி பல காலுமலற்றுவள். அதுகண்ட தாயானவள் ‘சாண்ணீளச் சிறுக்கி இப்படியும் வாய்வெருவலாகுமோ?’ என்று இனைய பலவுஞ்சொல்லி முனிவதும் பழிதூற்றுவதுமாயிருப்பதுண்டு; அங்ஙன மலர்தூற்றும் தாயை நோக்கிச் சொல்லுதிறாள்; தாய்மார்களே! நீங்கள் சிக்ஷிக்கவும் அதற்கு நான் உடன்படும் படியாகவும் விஷயமில்லையே; எம்பெருமானுடைய ஒவ்வோரவயமும் முந்தி மேல்விழுந்து நலியாநின்றதே! இதற்கு நான் என் செய்வேனென்கிறாள். அந்த அவயவங்களுள் திருமூக்கைப்பற்றி இங்குச் சொல்லுமிவள் ‘மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ! என்கிறாள் கற்பகக் கொடியோ! அல்லது கற்பகக் கொழுந்தோ! என்றே சொல்லலாம் படியுள்ளது. தீர விமர்சித்துப் பார்த்தால் பிறகுதான் என்பெருமானுடைய திருமூக்கென்னலாயிருந்தது.
ஈட்டியவெண்ணெயுண்டான் திருமூக்கு என்கையாலே இதற்கிணங்க நம்பிள்ளையருளிச் செய்கிறபடி பாரீர்;- “அநுகூலஸ்பர்கமுள்ள த்ரவயத்தாலல்லது தரிக்கமாட்டாதே வெண்ணெய் களவு காணப்புக்குக் கொண்டியிலே பிடியுண்டு, பின்பு அத்தை இல்லை செய்கைக்காக முகத்திலே தடவிக்கொள்ளுமே; அவவெண்ணெய் முடைநாற்றமும் உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு” என்பன ஈட்டு ஸ்ரீஸீக்திகள் இவ்விடத்தில் யசோதாங்குல்யக்ரோந்நமித சுபுகா க்ராணமுதிதென கபோலா வத்யாபி ஹயநுபரத தத்தர்ஷகமகௌ, விராஜேதே ஞ்ஞ்ஞ்ஞ்.ஸீந்தரஹரே:”. என்ற ஆழ்வானுடைய ஸீந்தரபாஹீஸ்தவ ஸ்ரீ ஸீக்தியும் சேர்த்து அநுஸந்திக்கத்தகும்.
நங்காய்! நீ சொல்லுகிறவிது எங்களுக்குத் தெரிகிறதில்லையே!, அது எங்கேயிருக்கின்றது? காட்டாய் என்று தாய்மார் கேட்க “என்தாவியுள்ளே மாட்டிய வல்விளக்கின் சுடராய் நிற்கும்;” என்கிறாள். எனது ஹருதயத்தினுள்ளே சுடர் வெட்டின பெருவிளக்கினொளியையுடைத்தாய் வலிதாய் நலியாநின்றது என்கை.
English Translation
O Ladies, what use punishing me with nudges and abuse? Is it a tendril or stem of a grown Kalpa creeper?, I know not, -the beautiful nose of the thief-Lord enters my soul, strongly like a radiant lamp hanging on a chain
