(3630)
இன்னுயிர்க் கேழையர் மேல்வளையும் இணை நீலவிற்கொல்,
மன்னிய சீர்மத னங்கருப்புச் சிலை கொல்,மதனன்
தன்னுயிர்த் தாதைகண் ணபெருமான் புரு வமவையே,
என்னுயிர் மேலன வாய் அடுகின்றன என்று நின்றே.
பதவுரை
|
இன் உயிர்க்கு |
– |
இனிமையான உயிரைக் கவர்வதற்காக |
|
ஏழையர் மேல் வளையும் |
– |
பெண்பிறந்தார் மேலேதானே வளைந்து நலிவதான |
|
நீலம் இணைவில் கொல் |
– |
நீல நிறத்தையுடைய இரண்டு விற்களோ? |
|
மன்னிய சீர் மதனன் |
– |
அழியாவழகடையனான மன்மதனுடைய |
|
கரும்பு சிலை கொல் |
– |
கரும்பமயமான வில்தானோ? |
|
ம நனன் தன் உயிர் தாதை கண்ணன் பெருமான் |
– |
மன்மதனுக்கு அபிமதனான் பிதாவாகிய கண்ணபிரானுடைய |
|
புருவம் அவையே |
– |
அந்தத் திருப்புருவங்களே |
|
என் உயிர் மேலன ஆய் |
– |
எனது உயிரையே கணிசித்து |
|
என்றும் நின்றே அடுகின்றன் |
– |
என்றும் ஒருபடிப்பட நின்று நலியாநின்றன. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (இன்னுயிர்க்கு.) எம்பெருமானுடைய திருப்புருவத்தினழகு வளைந்து கொண்டுவந்து நலிகிறபடியைக் கூறுகின்றாள். “தன்கைச் சார்ங்கமதுவே போல் புரவ வட்டமழகிய” என்ற ஆண்டாள் பாசுரத்தின்படியே புருவத்திற்கு வில்லை உவமை கூறுவதுண்டாதலால், காமிநீ ஜனத்தின் பிராணனையே இலக்காகப் பெற்ற இரண்டு விற்களோவிவை! என்கிறாள். அல்லது மன்மதனுடைய ஸௌந்தர்ய நிகேதனமான இக்ஷூகோதண்டமோ? என்கிறாள். இவனும் ஸாக்ஷ்ந்மந்மத மந்மதனேயன்ளோ இவையெல்லாமல்ல; ஸாரனான் மதனனுக்கு ஜனமபூமியான கண்ணபிரானுடைய புருவங்களேயிவை, இவற்றுக்கு என்னுயிரை மாய்ப்பதொன்றே கருமம், இவற்றுக்கு எங்ஙனே தப்பிப்பிழைப்பேனென்கிறாள்.
ருக்மிணிப் பிராட்டியினிடத்து மன்மதனுடைய அம்சமாக ப்ரத்யும்நன் பிறந்தனனாதலால், மன்மதன் கண்ணபிரானுடைய புதல்வனென்பது நூற்கொள்கை. “காமன்றன்தாதை” என்ற அருளிச் செயல்களுங் காண்க
English Translation
Is it the dark sugarcane bow of the blessed Madana, god of love directed on sweet damsels? The eyebrows of my Krishna, the father of Madana, appear everywhere and kill me, alas!
