(3631)
என்று நின்றேதிக ழும்செய்ய வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,
அன்றியென் னாவி யடுமணி முத்தங்கொ லோவறியேன்,
குன்றம் எடுத்தபி ரான் முறுவலெனதாவியடும்,
ஒன்றும் அறிகின்றி லேனன்னை மீர்! எனக் குய்விடமே!
பதவுரை
|
என்றும் நின்றே திகழும் |
– |
எப்போதும் ஒருபடிப்பட நின்று விளங்கும் தாய் |
|
செய்ய சுடர் ஈன் |
– |
சிவந்த சுடரை வெளிப்படுத்து மதான |
|
வெண் மின் கொல் |
– |
வெண்ணிறமான மின்னலோ! |
|
அன்றி |
– |
அல்லது |
|
என் ஆவி அடும் அணி முத்தம் கொலோ |
– |
என்னுயிரை மாய்க்கின்ற அழகிய முத்துநிரையோ!; |
|
அறியேன் |
– |
அறிகின்றிலேன்; |
|
குன்றம் எடுத்த பிரான் முறுவல் |
– |
கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்த பெருமானுடைய மந்த ஹாஸமானது |
|
எனது ஆவி அடும் |
– |
என் ஆத்மாவைத் தபியாநின்றது; |
|
அன்னைமீர் |
– |
தாய்மார்களே! |
|
எனக்கு உய்வு இடம் |
– |
நான் பிழைக்கு முபாயம் |
|
ஒன்றும் அறிகின்றிலேன் |
– |
சிறிதும் அறிகிறேனில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (இன்னுயிர்க்கு) எம்பெருமானுடைய புன்முறுவலின் அழகு வந்து நலிகிற படியைக் கூறுகின்றாள். தோன்றி மாயும் மின்னல் போலல்லாமல் எப்போதும் மாறாதே விளங்காநிற்பதாய் செய்ய சுடரை வெளிப்படுத்தாநின்ற மின்னலோவென்று முதலாடியால உல்லேகிக்கிறபடி. திருமுத்து நிரை வெண்ணிற முடைத்தாதலால் அது மின்னாகக் கூறப்பட்டது. திருமுத்து நிரை வெண்ணிற முன்னோடுகிறபடியால் செய்யசுடரை சேர்த்துக் கூறியபடி. என்; பிராணனை முடிக்கவந்த திருமுத்து நிரைதானேயோ என்பது இரண்டாமடி.
குன்றமெடுத்த பிரான் முறுவல் = இந்திரன் பசிக்கோபத்தினால் ஏழுநாள் விடாமழை பெய்விக்க. கோவலரையும் கோநிரையையுங் காத்தருள வேண்டிக்கோவாததன மலையைக் குடையாக வெடுத்துத் தாங்கிநின்றபோது கொடியேறுசெந்தாமரைக் கைவிரல்கள் கோலமுமழிந்தில வாடிற்றில் வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவணன மலையுமோர்சம்பிரதம் என்னும்படி அவலீலையாக நின்ற நிலையை நோக்கி அப்பா! நீ தேவதையா? யக்ஷ்னா? கந்தர்வனா?’ என்ன இடையர்கள் கேட்க. அஹம் வோ பாநதவோ ஜாத. என்று சொல்லிச் சிரித்த நிலைதன்னை இபபோது உருவெளிப்பாட்டில் கண்டாள் போலும்.
English Translation
Is it a flash of lightning, raking a fire that burns my soul? Or is it a beautiful string of pearls, I know not, The radiant smile of my Lord who lifted the mount kills me. Alas, Ladies! I know not where to escape
