(3408)

(3408)

அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன்

உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து,நான்

எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே,

திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை,

சங்கு சக்கரத் தாய்! தமியேனுக் கருளாயே.

 

பதவுரை

இலங்கை

–

லங்காபுரியை

செத்த

–

தொலைத்த

அம்மானே

–

ஸ்வாமியே!

திங்கள் சேர்

–

சந்திரனையும் சேர்ந்திருக்கிற

மணிமாடம்

–

மணி மயமான மாடங்களையுடைத்தாய்

நீடு

–

விசாலமான திருவீதிகளையுடைந்தாயிருக்கிற

கிரீவரமங்கலம் நகர் உறை

–

கிரீவரமங்கையிலே நித்யவாஸம் செய்தருளுகிற

சங்கு சக்கரத்தாய்

–

சங்கு சக்கரபாணியான ஸர்வேச்வரனே

நான்

–

அடியேன்

அங்குந்தேன் அல்லேன்

–

நித்யஸேவை பண்ணுகிற நித்யஸூரிகளிலே சேர்ந்தவனல்லேன்.

இங்குர்றேன் அல்லேன்

–

உன்னைக் கனவிலுமறியாத ஸம்ஸாரிகள் படியுமுடையேனல்லேன்

உன்னை காணும் அவாவில் வீழ்ந்து

–

உன்னைக் காணவேணுமென்கிற ஆசையில் படிந்தவானி

எங்குற்றேனும் அல்லேன்

–

ஒருவர் படியிலும் சேராதவனாயிரா நின்றேன்;

தமியேனுனக்கு

–

இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே

அருளாய்

–

அருள்புரியவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அங்குற்றேனல்லேன்) பரமபத்திலுள்ளாரில் சேர்ந்தவனல்லேன். இந்நிலத்திலுள்ளாரிலும் சேர்ந்தவனல்லேன் என்கிறவிதற்குக் கருத்து என்னென்னில்; பரமபதத்திலுள்ள நித்யமுக்தர்கள் க்ருதக்ருத்யர்களாய்ப் பலன் கைபுகுந்தவர்களாகையாலே அன்னவர்களது வகுப்பிலே நான் சேர்ந்தவனல்லேன்; தம் தலையாலே ஸாதநாநுஷ்டகம் பண்ணிக்கிடக்கிற இந்நிலத்திலுள்ளார் வகுப்பிலும் சேர்ந்தவனல்லேன்.

இதுவரையிலும் ஒரு ஸாதனமும் அனுட்டியாமற் போனாலும் இனிமேலாவது ஸாதநாதுஷ்டானம் பண்ண யோக்யதையுண்டன்றோ என்னில்; (உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனுமல்லேன்) மேலும் ஸாதாரநுஷ்டானம் பண்ணவொண்ணாதபடி வடிவழகு முதலானவற்றிலே விடுபட்டு உன்னைக் காணவேணுமென்னும் ஆசையாலே தளர்ந்து கிடக்கிறேனாகையாலே எவ்விதமான உபாயத்தையும் அநுஷ்டிக்க க்ஷமனல்லேன் என்கை.

நீ இருக்குமிடத்தே வந்து கிட்டி உன்னை அநுபவிக்கிறவனல்லேன்; உன்னை ஒரு பொருளாகவே மதியாத ஸம்ஸாரிகளின் திரளிலே சேர்ந்தவனுமல்லேன்; உன்னையொழியவும் தரித்திருக்கிறவர்களின் திரளிலும் சேர்ந்தவனல்லேன் என்றுமாம்.

இலங்கை செற்ற அம்மானே! = இலங்கையைக் கிழங்கெடுத்து வுனக்கு என் வரையில் இந்த ஸம்ஸாரத்தைக் கிழங்கெடுத்தல் அரிதோ? என்றவாறு.

(திங்கள் சேர் இத்யாதி.) சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற மணிமாடங்களையுடைய கிரீவரமங்கல நகரிலே திருவாழி திருச்சங்குடனே ஸேவைஸாதிக்கும் பெருமானே! துணைற்றவெனக்கு உறுதுணையாயிருந்து அருள் செய்தருளவேணும் என்றாராயிற்று.

 

English Translation

O Lord who destroyed Lanka, I am neither here nor here.  Fallen in the desire to see you, I stand nowhere.  O Lord of discus and conch residing in Srivaramanagala-nagar, -where the moon caresses fall mansions, -pray grace this forlorn self.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top