(3409)

(3409)

கருள புட்கொடி சக்க ரப்படை வான நாட! எங் கார்முகில் வண்ணா,

பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்,

தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கலநகர்க்கு,

அருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே.

 

பதவுரை

கருளன் புள்கொடி

கருடப்பறவையைக் கொடியாகவுடையனாய்

சக்கரம் படை

திருவாழியை ஆயுதமாகவுடையனாய்

வானம் நாட

பரமபதத்தை நாடாகவுடையனான பெருமானே!

எம்கார் முகில் எள்ளு

எமக்குக் காளமேகம் போன்ற திருவுருவைக் காட்டி உபசரிக்குமவனே!

தெருள் கொள்

மிகுந்த ஞானத்தையுடையராய்

கால் மறை வல்லவர்

நான்கு வேதங்களிலும் உள்ளவர்களான

பலர்

பல ஸ்ரீவைஷ்ணவர்கள்

வாழ்

வாழப்பெற்ற

கிரீவரமங்கலம் நகர்க்கு

வானமாமலைப்பதிக்கு

அருள் செய்து

கிருபைபண்ணி

அங்கு இருந்தாய்?

அத்திருப்பதியிலே நித்யவாஸம் செய்யுமவனே!

பொருள் அல்லாத என்னை

அபதார்த்தமாய் கிடந்தவென்னை

பொருள் ஆகி

ஸ்வரூபம் பெற்றரளும்படி அங்கீகரித்து

அடிமை கொண்டாய்

(திருவாய்மொழியாடுகையாகிற இக்) கைங்கரியத்தை என் பக்கலிலே திருவுள்ளம் பற்றினாய்; (இப்படியாகச்செய்த மஹோபகாரத்திற்கு)

ஒரு கைம்மாறு அறியேன்

நானொரு கைம்முதலுடையேனாக அறிகின்றிலேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கருளப்புட்கோடி.) கீழ்ப்பாட்டில் *சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே* என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். ‘ஆழ்வீர்!’ அருள் செய்யவேணுமென்கிறீர்; அப்படியே அருள் செய்வோம்; அதில் ஒரு குறையில்லை; ஆனால் நாம் அருள்செய்யவேணுமானால் உம்மிடத்தில் ஏதேனும் ஒரு கைம்முதல் இருக்கவேணுமே; அப்படி ஏதேனுமுண்டாகில் சொல்லிக்காணீர்’ என்ன, பிரானே! இனிமேல் நீ செய்கிற அருள் இருக்கட்டும்; இதுவரையில் உன் பக்கலில் நான் பெற்றிருக்கிற அருள் அபஸயிக்க முடியாததன்றோ; ஒரு வஸ்துவாக எண்ணத்தகுந்தவனல்லாதபடி யிருந்தவென்னை வஸ்துவாக்கி இவ்வளவு அதிகாரியாம்படி செய்தருளினாயே! இது என் பக்கலில் என்ன கைம்முதலைக் கண்டு? கீழ்க்காலத்தில் செய்த அருள் நீர்ஹேநுகமாயிருக்கத் தடையுண்டோ? இனி அருள் செய்கிறாய் செய்யாதொழிகிறாய்; அதில் விகாரமில்லை; இதுவரை நான் பெற்றிருக்கிற அருளுக்கு என்னிடத்தில் ஒரு கைம்முதலிருந்ததாக அறிகின்றிலேனே! என்கிறார்.

கருளப்புள்ளை (அதாவது, கருடபக்ஷியை)க் கொடியாகக் கொண்டு, அடியவர்கள் இருந்தவிடங்களிலே சென்று சாரியஞ் செய்வாய் நீ; சில ஸமயங்களில் “கருதுமிடம் பொருது- கைவந்த சக்கரத்தன்” என்கிறபடியே திருவாழியழ்வானைப் போகவிட்டு அடியவர்வினை கெடுப்பாய், திருநாட்டிலே சீரிய சிங்காசனத்திலேயெழுந்தருளியிருந்து நித்யமுக்தர்களுக்குக் காட்சி தந்தருளுமாபோலே எம்போல்வாரை வாழ்விக்க வேண்டிக் காளமேகத் திருவுருவத்தைக் காட்டுவாய்; இப்படியெல்லாம் உகரிந்தருளுமவனான நீ அபதார்த்தமாயிருந்தவென்னை ஒரு பதார்த்தாமக்கி இங்ஙனே வாசிகமான கைங்கரியத்தைப் பண்ண வல்லேனாம்படி அருள்புரிந்தாய்; திருநாட்டிலே நித்யமுக்தர்களுக்கு நித்யமுக்தர்களுக்கு நித்யமாக ஓலமுகங் கொடுத்துக்கொண்டிருக்கிற வண்ணமாக, வைதிகர்கள் நிறைந்த வானமாமலைப்பதியிலே நித்யஸந்நிதி பண்ணியிருக்கின்ற பிரானே! நீ இவ்வளவாக உபகரித்து நின்றவிதுக்கு என் தலையில் ஒரு கைம்முதல் இருந்ததாக அறிகின்றிலேன் என்றாராயிற்று.

முதலே பிடித்துக்  கைம்முதலை எதிர்பாராமலே காரியஞ்செய்யுமுனக்கு இப்போதாக ஒரு கைம்முதல் பார்ப்பது தகுதியோ? என்றவாறு.

கருடா: என்கிற வடசொல் கருளன் என்றாயிற்று; டகரம் ஸகரமாயிற்று. இங்கு ;- ‘ஈடே என்கிறவித்தை ஈனே என்னுமாபோலே” என்றுள்ளது. *** என்கிற வேதவாக்கியம் மற்றொரு வேதவாக்கியத்தில் **- என்று ஓதப்படுவதை இங்கு எடுத்துக்காட்டினபடி.

 

English Translation

O Dark-hued Lord of Vaikunta with the discus and a Garuda-banner, you made a person of this insignificant self, and took me into your service.  O Lord of Sivaramangala-nagar, where many learned Vedic seers live, you have graced me from there, I know not how to repay you!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top