(3410)
மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு ஆயன்று மாயப்போர் பண்ணி,
நீறு செய்த எந்தாய். நிலங்கீண்ட அம்மானே,
தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,
ஏறிவீற் றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே?
பதவுரை
|
மாறு சேர் படை |
– |
விரோதிகளாய்க்கொண்டு சேர்ந்த வேளையையுடைய |
|
நூற்றுவர் |
– |
துரியோதநாதிகள் நூறு பேர்களும் |
|
மல்க |
– |
தொலையும்படி |
|
அன்று |
– |
அக்காலத்தில் |
|
ஓர் ஐவர்க்கு ஆம் |
– |
பஞ்சபாண்டவர்களுக்குத் துணைவனாயிருந்து கொண்டு |
|
மாயம் போர் பண்ணி |
– |
ஆச்சரியமான யுத்தத்தை நடத்தி |
|
நீறு செய்த எந்தாய் |
– |
நீறுபடுத்தின ஸ்வாமியே! |
|
நீலம் கீண்ட அம்மானே |
– |
பூமியை ப்ரளயாபத்தில் நின்றும் இடர்ந்தெடுத்த பெருமானே! |
|
தேறு ஞானத்தர் |
– |
தெளிந்த ஞானத்தையுடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய |
|
வேதம் வேள்வி அறா |
– |
வைதிகஸமாராதனம் இடைவிடாமல் நடக்குமிடமான |
|
கிரீவரமங்கலம் நகர் |
– |
வானமாமலைப் பதியிலே |
|
ஏறி |
– |
குடியேறி |
|
வீற்றிருந்தாய் |
– |
பெருமை தோற்ற எழுந்தருளியிருக்குமவனே |
|
உன்னை |
– |
உன்னை |
|
எங்கு எய்த |
– |
எங்கேவந்து கிட்டுவதாக |
|
கூவுவன் |
– |
நான் கூப்பிடுவேன்? |
|
(உன்னை நான் நிர்பந்திருப்பதென்றொரு! பொருளுண்டோ? என்றவாறு.) |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மாறுசேர்படை) அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார்.
“***- ஸமஹம் ஸர்வபூதேஷுமே த்வேஷ்யோஸ்தி ந ப்ரியர்!” என்றிருக்கிற பகவானுக்கு ஒருவரையும் பகைவராகச் சொல்லக்கூடாதாயிருக்க, “மாறுசேர்படை நூற்றுவார்” என்று சொல்லலாமோவென்னில், ஆச்ரித விரோதிகளைத் தன் விரோதிகளாக எம்பெருமான் நினைப்பவனாதலாலும், அது தோன்ற “*** -த்விஷதர்கம் ந போந்தவ்யம் த்விஷந்தம் ஸகவ போஜயேத், பாண்டவாந் த்விஷனே ராஜந் மம ப்ராணா ஹி பாண்டவா:” என்று தானே அருளிச் செய்திருக்கையாலும் சொல்லத் தட்டில்லை.
மாயப்போர் = மாயமென்று ஆச்சரியத்திற்கும் கபடத்திற்கும் பேராதலால், ஆச்சரியமான யுத்தம் என்றாவது, கபடமான யுத்தம் என்றாவது பொருள் கொள்ளலாம். ஈடு:- “ஆச்சர்யமான யுத்தமென்னுதல், வஞ்சகமான யுத்தமென்னுதல், அதாவது- பகலை இரவாக்கியும், ஆயுதமெடேனென்று ஆயுதமெடுத்தும், சத்ருக்களுயிர்நிலையைக் காட்டிக்கொடுத்தும் செய்தவை.”
வஞ்சக யுத்தம் செய்வது தருமமர்த்தியான பகவானுக்குத் தகுதியோவென்று சிலர் சங்கிப்பார்கள்; வஞ்சனைக்காரர்கள் திறத்திலே வஞ்சகவழியைக் கைப்பற்றுதல் ஏற்குமென்ப.
நீலம் நீண்டவம்மானே! = பிரளயங்கொண்ட பூமியை அண்டயித்தியில் நின்றம் ஒட்டுவிடுவித்துக் கொணர்ந்து வைத்தாயே! அது அபேஷித்ததனால் செய்தாயோ? நம்முடைய சரக்கை நாம் நோக்க வேணுமென்று செய்தவத்தனையே, அதுபோலே நானும் உன் சரக்கன்றோ, என்னையும் நோக்க வேண்டாவோ என்கை.
(தேவ ஞானந்தர் இத்யாதி.) தெளிந்த ஞானம்பெற்ற மஹா விவேகிகளில் வைதிக ஸமாராதனங்கள் இடைவிடாது செல்லப்பெற்ற கிரீவரமங்கலநகரிலே அவர்களோடொக்கக் குடியேறிப் பெறாய்பேறு பெற்றானாயிருக்கிற பெருமானே! நீயே விஷயீகரிக்குமித்தனையல்லது நான் உன்னைப் பெறுகைக்கீடான முயற்சி பண்ணுகையென்று ஒரு பொருளுண்டோ? நீ கூவுதல் வருதல் செய்வதன்றோ தகுந்தது என்றபடி..
English Translation
O Lord who lifted the Earth! Then you fought a battle for the five Pandavas against the Kauravas and reduced the foes to ashes; you have come to reside in Srivaramangala-nagar amid learned seers who perform Vedic- sacrifices incessantly; I only call to join you there.
