(3408)
அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து,நான்
எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே,
திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை,
சங்கு சக்கரத் தாய்! தமியேனுக் கருளாயே.
பதவுரை
|
இலங்கை |
– |
லங்காபுரியை |
|
செத்த |
– |
தொலைத்த |
|
அம்மானே |
– |
ஸ்வாமியே! |
|
திங்கள் சேர் |
– |
சந்திரனையும் சேர்ந்திருக்கிற |
|
மணிமாடம் |
– |
மணி மயமான மாடங்களையுடைத்தாய் |
|
நீடு |
– |
விசாலமான திருவீதிகளையுடைந்தாயிருக்கிற |
|
கிரீவரமங்கலம் நகர் உறை |
– |
கிரீவரமங்கையிலே நித்யவாஸம் செய்தருளுகிற |
|
சங்கு சக்கரத்தாய் |
– |
சங்கு சக்கரபாணியான ஸர்வேச்வரனே |
|
நான் |
– |
அடியேன் |
|
அங்குந்தேன் அல்லேன் |
– |
நித்யஸேவை பண்ணுகிற நித்யஸூரிகளிலே சேர்ந்தவனல்லேன். |
|
இங்குர்றேன் அல்லேன் |
– |
உன்னைக் கனவிலுமறியாத ஸம்ஸாரிகள் படியுமுடையேனல்லேன் |
|
உன்னை காணும் அவாவில் வீழ்ந்து |
– |
உன்னைக் காணவேணுமென்கிற ஆசையில் படிந்தவானி |
|
எங்குற்றேனும் அல்லேன் |
– |
ஒருவர் படியிலும் சேராதவனாயிரா நின்றேன்; |
|
தமியேனுனக்கு |
– |
இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே |
|
அருளாய் |
– |
அருள்புரியவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (அங்குற்றேனல்லேன்) பரமபத்திலுள்ளாரில் சேர்ந்தவனல்லேன். இந்நிலத்திலுள்ளாரிலும் சேர்ந்தவனல்லேன் என்கிறவிதற்குக் கருத்து என்னென்னில்; பரமபதத்திலுள்ள நித்யமுக்தர்கள் க்ருதக்ருத்யர்களாய்ப் பலன் கைபுகுந்தவர்களாகையாலே அன்னவர்களது வகுப்பிலே நான் சேர்ந்தவனல்லேன்; தம் தலையாலே ஸாதநாநுஷ்டகம் பண்ணிக்கிடக்கிற இந்நிலத்திலுள்ளார் வகுப்பிலும் சேர்ந்தவனல்லேன்.
இதுவரையிலும் ஒரு ஸாதனமும் அனுட்டியாமற் போனாலும் இனிமேலாவது ஸாதநாதுஷ்டானம் பண்ண யோக்யதையுண்டன்றோ என்னில்; (உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனுமல்லேன்) மேலும் ஸாதாரநுஷ்டானம் பண்ணவொண்ணாதபடி வடிவழகு முதலானவற்றிலே விடுபட்டு உன்னைக் காணவேணுமென்னும் ஆசையாலே தளர்ந்து கிடக்கிறேனாகையாலே எவ்விதமான உபாயத்தையும் அநுஷ்டிக்க க்ஷமனல்லேன் என்கை.
நீ இருக்குமிடத்தே வந்து கிட்டி உன்னை அநுபவிக்கிறவனல்லேன்; உன்னை ஒரு பொருளாகவே மதியாத ஸம்ஸாரிகளின் திரளிலே சேர்ந்தவனுமல்லேன்; உன்னையொழியவும் தரித்திருக்கிறவர்களின் திரளிலும் சேர்ந்தவனல்லேன் என்றுமாம்.
இலங்கை செற்ற அம்மானே! = இலங்கையைக் கிழங்கெடுத்து வுனக்கு என் வரையில் இந்த ஸம்ஸாரத்தைக் கிழங்கெடுத்தல் அரிதோ? என்றவாறு.
(திங்கள் சேர் இத்யாதி.) சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற மணிமாடங்களையுடைய கிரீவரமங்கல நகரிலே திருவாழி திருச்சங்குடனே ஸேவைஸாதிக்கும் பெருமானே! துணைற்றவெனக்கு உறுதுணையாயிருந்து அருள் செய்தருளவேணும் என்றாராயிற்று.
English Translation
O Lord who destroyed Lanka, I am neither here nor here. Fallen in the desire to see you, I stand nowhere. O Lord of discus and conch residing in Srivaramanagala-nagar, -where the moon caresses fall mansions, -pray grace this forlorn self.
