(3407)
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும் இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.
பதவுரை
|
சேறு |
– |
சேற்று நிலங்களிலே |
|
செந்நெலூடு |
– |
செந்நெற்பயிர்களிடையே |
|
தாமரை மலர் |
– |
தாமரைகள் மலரப்பெற்ற |
|
சிரீவரமங்கலம் நகர் |
– |
கிரிவரமங்கையென்னும் வானமாமலைப்பதியிலே |
|
வீற்றிருந்த எந்தாய் |
– |
இருந்தருளும் எம்பெருமானே! |
|
அரவின் அணை அம்மானே |
– |
சேஷசமயனனான தலைவனே! |
|
நோற்ற |
– |
நானாக அனுட்டித்த |
|
நோன்பு இலேன் |
– |
கருமயோக முடையேனல்லேன்; |
|
நுண் அறிவு இலேன் |
– |
நுட்பமான ஞானயோகமும் உடையேனல்லேன்; |
|
ஆகினும் |
– |
இங்ஙனே நைம்முத வற்றவனேயானாலும் |
|
இனி |
– |
இது முதலாக |
|
உன்னைவிட்டு |
– |
உன்னை யொழிய |
|
ஒன்றும் |
– |
சிறிதும் |
|
ஆற்ற நிற்கின்றிலேன் |
– |
தரித்திருக்க மாட்டுகின்றிலேன்; |
|
உனக்கு |
– |
ஸர்வரஷகனென்று பேர்பெற்றிருக்கிற உனக்கு |
|
அங்கே |
– |
அந்த வானமாமலைபதிதன்னிலே |
|
மிகை அல்லேன் |
– |
(ரக்ஷ்யவர்க்கத்தில்) வெளிப்பட்டவனல்லேன் (என்னை ரக்ஷித்தே தீரவேணுமென்றபடி. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (நோற்ற நோன்பு) நோன்பு யன்று கர்மயோகத்தைச் சொல்லுகின்றது; தமக்குக் கர்மயோகமில்லையென்று சொல்லவேண்டில் ‘நோன்பிலேன்” என்றால் போதாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்னவேணுமோ? அதற்குக் கருத்து ஏன்? என்னில்; ஒருபடியாலும் நோன்பு இல்லை என்று சொல்லப்போகாது; யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆறுஷங்கிகம் என்றாப்போலே சில ஸுக்ருத விசேஷங்கள் இல்லையென்னப்போமோ? “என் கைப்பாடாகச் செய்ததொரு கருமமில்லை” என்று சொல்லுவதே யுந்தமாதலால் நோன்புக்கு ‘நோற்ற’ என்று அடைமொழி கொடுக்கப்பட்டது.
நுண்ணறிலிவேன் = அறிவுக்கு நுண் என்று அடைமொழி கொடுத்ததன் கருத்து யாதெனில்; முந்நுற ஸ்வஸ்வரூபத்தையுணர்ந்து பிறகு பாஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பதாகிற நுட்பமான அறிவு இல்லாமையைச் சொன்னபடி.
ஆகிலும் = என் கையிலே ஒரு நைம்முதலும் இல்லையாகிலும் என்றபடி, கர்மயோக ஜ்ஞானயோகங்களில்லாமை சொன்னது பக்தியோகமில்லாமை சொன்னபடிக்கும் உபலக்ஷணமாம். ** -தர்மநிஷ்டோஸ்மி க. சாத்மேவேதீ க பக்திமாந் த்வந் சரணாரலிந்தே” என்று ஆளவந்தாரருளிச் செய்த சந்தை இங்கு அநுஸந்தேயம்.
இனி = உன்னையும் என்னையும் அறியப்பெறாதிருந்த காலத்திலே இழந்தொழிந்தேனாகிலும் அறியப்பெற்ற இறுமுதலாக ஆறியிருக்க முடியுமோ? இங்கே நம்பிள்ளையீடு காண்மின்;- “உன்னையும் அறியாதே என்னையும் அறியாதேயிருந்தவன்று இழந்தது அமையாதோ? உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்கவேணுமோ? ஒருவன் கையிலே சோறுமுண்டாய். அவன் இடுவானுமானால், ஒருவனுக்குச் சோறுமின்றிக்கே பரியனுமானால் இழக்க வொண்ணுமோ? என் கையிலேயும் ஒன்றுண்டாய் அது சமையுந்தனையும் ஆறியிருக்கிறோனோ?… அநாதிகாலம் மெய்மறந்து இழந்த காலம் போறாதோ? நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேணுமோ?”
உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றுநிற்கின்றிலேன் = உன்னை நிர்ப்பந்திப்பதே எனக்குப் பணியாய் விட்டது; உன்னைத் தவிர வேறொன்றால் காரியமாகுமென்று இருக்கமாட்டிற்றிலேன் என்றவாறு. கர்மயோகம் முதலிய ஒன்றிலும் அந்வயமில்லாத நமக்கு எம்பெருமானைப் பற்றின சிந்தனை ஏதுக்கு? என்று நான் கையொழிந்து நிற்கவேண்டியவனாயிருந்தும் உன்னை மறந்து பிழைக்கமாட்டிற்றிலேன் என்றபடியுமாம்.
அரவீனணையம்மானே! = “சென்றால் குடையாம் இருந்தால் சிக்கனமாம்” இத்யாதிப்படியே ஸகலவித கைங்கரியங்களையும் செய்யுமாறு கைக்கொண்ட திருவனந்தாழ்வான் எங்களிலே ஒருவனன்றோ? அவனைப் போலே என்னையும் அடிமை கொண்டருளவேண்டாவோ? என்பது குறிப்பு.
அரவீனணையம்மானே! ஒன்றுமாற்றகிற்கின்றிலேன் = நான் படுக்கையில்கண்ணுறங்கப்பொறாதே “உள்ளஞ்சோரவுகந்தெதிர்விம்மி உரோமகூபங்களாய்க் கண்ணநீர்கள், துள்ளஞ்சோரத் துயிலணை கொள்ளேன்” என்னும்படி. கிடவா நிற்க, நீ மெல்லிய படுக்கைப்பார்த்துக் கண்ணுறங்குவதைக் கண்டு என்னால்ஆற்றமுடியவில்லையே என்பதாகவுங் கொள்ளலாம்.
(சேற்றுத் தாமரை இத்யாதி.) பரமபத்தையும் மறக்கும்படியாகவன்றோ இத்தலத்தின் வாய்ப்பு இருப்பது சேறுகளிலே தாமரைகளானவை செந்நெற் பயிர்களினூடே வெகு அழகாக அலர்ந்திருக்கப்பெற்ற கிரீவரமன் கையிலே வீற்றிருந்த திருக்கோலமாகக் காட்சி தந்தருளும் பெருமானே! (உமக்கு மிகையல்லேன்.) உன்னாலே ரக்ஷிக்கப்படவேண்டிய சேநவர்கள் களில் நான் புறம்புபட்டவனல்லேன் என்கை. என்னையும் ரக்ஷித்தே தீரவேணுமென்கை.
English Translation
O Lord who resides in fertile Sivaramangalanagar where red lotus and paddy abound, I have not done penances, I have no subtle intelligence, yet no more can I bear to be separated from you even for a moment. Am I one too many for you there?
