(3266)

(3266)

அறியும்செந் தீயைத் தழுவி அச்சுதன் என்னும்மெய் வேவாள்,

எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்,

வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற

செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே.

பதவுரை

வினையுடை யாட்டியேன் பெற்ற

கொடுவினையேனாகிய நான் பெற்ற
செறி வளை முன் கை சிறு மான்

நெருங்கின வளையல்களயைணிந்த முன்கைகளையுடைய இவ்விளம் பெண்ணானவள்
அறியும்

சுடுமென்று எல்லாராலும் அறியப்பட்ட
செம் தீயை தழுவி

சிவந்த நெருப்பைத் தழுவி
அச்சுதன் என்னும்

‘எம்பெருமான்’ என்கிறாள்;
மெய் வேவாள்

உடம்பு வேகின்றிலள்;
எறியும்

வீசுகின்ற
தண் காற்றை தழுவி

குளிர்ந்த காற்றைத் தழுவி
என்னுடை கோவிந்தன் என்னும்

‘என்னுடைய கண்ணன்’ என்கிறாள்;
வெறிகொள்

பரிமளம்மிக்க
துழாய் மலர்

திருத்துழாய் மலர்கள்
நாறும்

மணக்கப் பெற்றிருக்கின்றாள்:
செய்கின்றது

(இங்ஙனே இவள்) செய்கின்ற தொழில்கள்
என் கண்ணுக்கு ஒன்றே

என் கண்களுக்கு ஒன்றுதானா? பலபல.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மகளுடைய அதிப்ரவ்ருத்திகளைச் சொல்லப் புகுந்து, இவற்றுக்குக் கணக்கில்லை யென்கிறாள்.  எம்பெருமானுடைய திருவடிவைச் சொல்லுமிடங்களில் “தேஜஸாம் ராசிம் ஊர்ஜிதம்” என்றும் “குழுமித் தேவர்குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு” என்றும் தேஜபுஞ்ஜமாகவே சொல்லுவர்கள்.  ப்ரதிபத்தி பண்ணித்தழுவுகின்றாள்; அந்த ப்ரதிபத்தியின் சுத்தியாலே, மெய்வேவாள் -உடம்பில் தாஹமுண்டாவது கிடையாது. அக்னிதேவதை தன் காரியத்தைச் செய்யாதிருக்கமோவென்னில், ப்ரஹ்லார்தாழ்வானுக்குச்; செய்தாலன்றோ பராங்குசநாயகிக்குச் செய்வது.  “தாதைஷ வஹ்நி: பவநோரிதோபி ந மாம் தஹதி அத்ர ஸமந்ததோஹம்.  பச்யாமி பத்மாஸ்;தரணாஸ்த்ருதாநி சீதாநி ஸர்வாணி திசாம் முகாநி.” என்றாளிறே ப்ரஹ்லாதாழ்வான்.  என்னை நெருப்புச் சுடுகின்றதில்லையே யென்றான்; அதுபோலேயாயிற்று இதுவும்.

எறியுங் தன்காற்றைத் தழுவி யென்னுடைக் கோவிந்தனென்னும் = வீசுகிற குளிர்ந்த காற்றை, பசுமேயத்துவிட்டுத் தன்னோடே கலக்க வருகிற க்ருஷ்ணனாகக் கொண்டு தழுவி பிரிதியுள்ளடங்காமையாலே என்னுடைய கோவிந்தன் என்கிறாள்.

வெறிகொள் துழாய்மலர்நாறும் =  திருத்துடாய்ப்பரிமளம் கமழ்கின்றது தலைமகளிடத்து.  பிரிவு நிலைமையில் திருத்துழாய் நறுமணம் கமழ ப்ரஸக்தியேதென்னில்; இதற்குமுன் ஸம்ச்லேஷ தசையிலுண்டான பரிமளம் பத்தெட்டு குளிக்கு நிற்குமே. அன்றியும் இரண்டாமடியிற் கூறியபடி, எம்பெருமான் காற்றோடே கலந்து புகுந்து கலவிசெய்தாகவுங் கூடும்.

வினையுடையாட்டினேன் பெற்ற = நல்வினை யென்றாவது தீவினை யென்றாவது சிறப்பித்துக் கூறவில்லை; ஆயினும் நிர்வேத ப்ரகரணமாகையாலே தீவினை யுடையேன் என்றே பொருள்படும்; பட்டாலும், இப்படி பகவத்  விஷயத்தில் அவகாஹிக்கும்படியான பெண்ணைப் பெற்றது நல்வினையின் பயனாகவே உள்ளூறக் கருதத்தக்கதாதலால் நல்விளையாட்டியேன் என்பதே உள்ளுறை பொருளாம்.  உண்மையில் தாயின் நிலைமையும் ஆழ்வார்க்கே உள்ளதாதலால் இவ்வினையுடைமை ஆழ்வார்க்கேயாகும்.

ஒன்றே? – ஒன்றல்ல, பல என்றபடி.

English Translation

She fondles the known red fire unhurt and says, “This is Achyuta!” She fondles the blowing cold wind and says, “Here comes Govinda!” Woe is me, -she smells strongly of Tulasi flowers, -the things my bangled fawn does these days!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top