(3266)
அறியும்செந் தீயைத் தழுவி அச்சுதன் என்னும்மெய் வேவாள்,
எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்,
வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே.
பதவுரை
| வினையுடை யாட்டியேன் பெற்ற |
– |
கொடுவினையேனாகிய நான் பெற்ற |
| செறி வளை முன் கை சிறு மான் |
– |
நெருங்கின வளையல்களயைணிந்த முன்கைகளையுடைய இவ்விளம் பெண்ணானவள் |
| அறியும் |
– |
சுடுமென்று எல்லாராலும் அறியப்பட்ட |
| செம் தீயை தழுவி |
– |
சிவந்த நெருப்பைத் தழுவி |
| அச்சுதன் என்னும் |
– |
‘எம்பெருமான்’ என்கிறாள்; |
| மெய் வேவாள் |
– |
உடம்பு வேகின்றிலள்; |
| எறியும் |
– |
வீசுகின்ற |
| தண் காற்றை தழுவி |
– |
குளிர்ந்த காற்றைத் தழுவி |
| என்னுடை கோவிந்தன் என்னும் |
– |
‘என்னுடைய கண்ணன்’ என்கிறாள்; |
| வெறிகொள் |
– |
பரிமளம்மிக்க |
| துழாய் மலர் |
– |
திருத்துழாய் மலர்கள் |
| நாறும் |
– |
மணக்கப் பெற்றிருக்கின்றாள்: |
| செய்கின்றது |
– |
(இங்ஙனே இவள்) செய்கின்ற தொழில்கள் |
| என் கண்ணுக்கு ஒன்றே |
– |
என் கண்களுக்கு ஒன்றுதானா? பலபல. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மகளுடைய அதிப்ரவ்ருத்திகளைச் சொல்லப் புகுந்து, இவற்றுக்குக் கணக்கில்லை யென்கிறாள். எம்பெருமானுடைய திருவடிவைச் சொல்லுமிடங்களில் “தேஜஸாம் ராசிம் ஊர்ஜிதம்” என்றும் “குழுமித் தேவர்குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு” என்றும் தேஜபுஞ்ஜமாகவே சொல்லுவர்கள். ப்ரதிபத்தி பண்ணித்தழுவுகின்றாள்; அந்த ப்ரதிபத்தியின் சுத்தியாலே, மெய்வேவாள் -உடம்பில் தாஹமுண்டாவது கிடையாது. அக்னிதேவதை தன் காரியத்தைச் செய்யாதிருக்கமோவென்னில், ப்ரஹ்லார்தாழ்வானுக்குச்; செய்தாலன்றோ பராங்குசநாயகிக்குச் செய்வது. “தாதைஷ வஹ்நி: பவநோரிதோபி ந மாம் தஹதி அத்ர ஸமந்ததோஹம். பச்யாமி பத்மாஸ்;தரணாஸ்த்ருதாநி சீதாநி ஸர்வாணி திசாம் முகாநி.” என்றாளிறே ப்ரஹ்லாதாழ்வான். என்னை நெருப்புச் சுடுகின்றதில்லையே யென்றான்; அதுபோலேயாயிற்று இதுவும்.
எறியுங் தன்காற்றைத் தழுவி யென்னுடைக் கோவிந்தனென்னும் = வீசுகிற குளிர்ந்த காற்றை, பசுமேயத்துவிட்டுத் தன்னோடே கலக்க வருகிற க்ருஷ்ணனாகக் கொண்டு தழுவி பிரிதியுள்ளடங்காமையாலே என்னுடைய கோவிந்தன் என்கிறாள்.
வெறிகொள் துழாய்மலர்நாறும் = திருத்துடாய்ப்பரிமளம் கமழ்கின்றது தலைமகளிடத்து. பிரிவு நிலைமையில் திருத்துழாய் நறுமணம் கமழ ப்ரஸக்தியேதென்னில்; இதற்குமுன் ஸம்ச்லேஷ தசையிலுண்டான பரிமளம் பத்தெட்டு குளிக்கு நிற்குமே. அன்றியும் இரண்டாமடியிற் கூறியபடி, எம்பெருமான் காற்றோடே கலந்து புகுந்து கலவிசெய்தாகவுங் கூடும்.
வினையுடையாட்டினேன் பெற்ற = நல்வினை யென்றாவது தீவினை யென்றாவது சிறப்பித்துக் கூறவில்லை; ஆயினும் நிர்வேத ப்ரகரணமாகையாலே தீவினை யுடையேன் என்றே பொருள்படும்; பட்டாலும், இப்படி பகவத் விஷயத்தில் அவகாஹிக்கும்படியான பெண்ணைப் பெற்றது நல்வினையின் பயனாகவே உள்ளூறக் கருதத்தக்கதாதலால் நல்விளையாட்டியேன் என்பதே உள்ளுறை பொருளாம். உண்மையில் தாயின் நிலைமையும் ஆழ்வார்க்கே உள்ளதாதலால் இவ்வினையுடைமை ஆழ்வார்க்கேயாகும்.
ஒன்றே? – ஒன்றல்ல, பல என்றபடி.
English Translation
She fondles the known red fire unhurt and says, “This is Achyuta!” She fondles the blowing cold wind and says, “Here comes Govinda!” Woe is me, -she smells strongly of Tulasi flowers, -the things my bangled fawn does these days!
