(3249)

(3249)

கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்

அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி,

வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்

நம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர்.

 

பதவுரை

நங்கைமீர்

பெண்காள்!

கொம்பு போல் சீதை பொருட்டு

பூங்கொடி போன்ற ஸீதாபிராட்டியின் பொருட்டு

இலங்கை நகர்

இலங்காபுரியில்

அம்பு ஏரி

அம்புகளில் நின்றும் கிளம்பும்  அக்னியை

உய்த்தவர்

செலுத்தின  இராமபிரானுடைய

தாள் இணைமேல்

உபயபாதங்களின் மீது

அணி

சாத்தின

வம்பு அவிழ் தண் ஆம் துழாய் மலர்க்கே

பரிமளப்ரசுரமாய்க் குளிர்ந்தழகிய திருத்துழாயின் மீதே

இவள் நம்பும்

இவள் ஆசைப்படா நின்றாள்;

இதற்கு நான் என் செய்வேன்

இதற்கு நான் என்ன பரிஹாரம் செய்வது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸீதாபிராட்டிக்காக இலங்கை பாழாளாகப் படைபொருத பெருமானது திருவடிகளில் திருத்துழாயை என்மகள்  விரும்பா நின்றாளென்கிறாள். கொம்பு போல்சீதைபொருட்டு  ஸ்த்ரீகளைக் கொம்பனார்  என்று கூறுவது தமிழர் மரபு; வஞ்சிக் கொம்புபோல் மிக்க பெருந்தன்மை பொருந்தியிருக்கும்படியைக் கூறியவாறு.  கொம்புபோல் என்பதற்கு மற்றொரு பொருளும் நம்பிள்ளை அருளிச் செய்வதுண்டு; “’அநந்யா’ என்கிறபடியே ஏகவஸ்துவில் ஏகதேசமென்னுதல்” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. கொம்பானது வ்ருக்ஷத்தில் ஏகதேசமாகவுள்ளது; “வாஸூதேவதரு” என்றும், “எனக்கே தன்னைத்தந்த கற்பகம்” என்றும் வ்ருக்ஷமாகச் சொல்லப்படுகிறபடியால் அதில் ஏகதேசமான கொம்பாகப் பிராட்டியைச் சொல்லுதல் பொருந்தும்.

சீதை-ஸீதா என்ற வடசொல் திரிபு.  (ஸீதா லாங்கலபத்ததி:) என்ற நிகண்டின்படி உழுபடைக்கு ஸீதா என்று பெயராதலால் ஜநகசக்ரவர்த்தியின் யாகசாலை நிலத்தில் உழுபடை பட்டவிடத்தில்  நின்றும் பிராட்டி தோன்றின காரணம்பற்றி அவளுக்கு இலக்கணையினால் ஸீதையென்று பெயராயிற்று.

நம்பும்-விருமபும்; “நம்பும் மேவும் நசையாகும்மே.”

 

English Translation

O Ladies, what shall I do? She covets only the fragrance-wafting Tulasi garland on the feet of the Lord, -who gutted Lanka with his arrows, for the love of beautiful Sita

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top