(3140)

(3140)

கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று

பாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன்,

மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்,

தாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே?

 

பதவுரை

கொடு வினை

கொடிய பாவங்களுக்குப் பிறப்பிடமாகிய

தூற்றுள் நின்று

நுழைந்தால் வெளிப்பட முடி(யாத) புதர் போன்ற ஸம்ஸாரத்தில் அகப்பட்டு நின்று

பல காலம்

அநேக காலம்

வழி திகைத்து

வழி தெரியாமல் சுழன்று

அலமருகின்றேன்

வருந்திக் கிடக்கின்ற

பாவியேன்

மஹாபாபியான நான்

அன்று

முன்பொருகால்

மேவி

திருவள்ளமுவந்து

ஆ நிரை

பசுக்கூடட்ங்களை

காத்தவன்

ரக்ஷித்தவனும்

உலகம் எல்லாம் தாவிய

(த்ரிவிக்ரமனாய்) உலகங்களையெல்லாம் அளந்தவனுமாகிய

அம்மானை

ஸ்வாமியை

இனி

இனி

கூவி கூவி

பலகாலும் கூப்பிட்டு

எங்கு

எங்கே

தலைப்பெய்வன்

கிட்டுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஸ்ரீகிருஷ்ணனாயும் ஸ்ரீவாமநனாயும் அவதரித்து உலகுக்குப் பண்ணின அநுக்ரஹத்திற்குத் தப்பின நான் இனி யுன்னைப் பெறுதற்கு வழியுண்டோவென்று க்லேசந்தோற்றப் பேசுகிறார். பிரானே! நான் இருக்குமிடமோ ஸம்ஸாரம்; இதுவோ தூறு மண்டிக்கிடக்கிறது. இங்கிருந்து கிளம்ப வழியில்லை. இருந்தவிடத்தில் நின்றும் பலகாலும் கூப்பிடாநின்றேன். நீ ஆபத்துக்கு உதவுபவனல்லையாகில் நான் இவ்வளவு கூப்பீடு செய்யமாட்டேன்; திருவாய்ப்பாடியில் பசுக்களெல்லாம் பெரு மழையில் நோவு பட்டக்காலத்தில் ஒன்றின்மேல் ஒரு துளி விழாதபடி ஒரு மலையைத் தூக்கியெடுத்து ரக்ஷித்தாய்* அங்ஙனம் ஒரு ஊர்க்கு உதவின மாத்திரமன்றிக்கே எங்குமொக்க எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்தருளினாய்; அன்று நான் எந்த மூலையிலே கிடந்தேனோ? அப்படி ஸர்வஸ்வதாகம் பண்ணின காலத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்புகுகிறேன்? அஸாத்யமான விஷயத்தில் நாம் நசை பண்ணுவது வீண் என்று தெரிந்தும் வாளா இருக்க மாட்டிற்றிலேன்; கூப்பீடே போதுபோக்காக விருக்கின்றேன் என்றாராயிற்று.

கொடுவினைத்தூற்றுள் நின்று” என்றவிடத்திற்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- கூப்பீடு கேட்டு இரங்கியெடுப்பதாக ஈச்வரன் கை நீட்டினால், நீட்டினகை வாங்கவொண்ணாத நிலத்திலேயிற்றுக் கூப்பிடுவது”

பாவியேன் என்றவிடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை:- ஸ்ரீஜநகராஜன் திருமகள் ஸ்ரீவால்மீகிபகவானாஸ்ரமபரிஸரத்திலே கூப்பிட்டாப்போலே, சிலர் ஐயோவென்னக் கூப்பிடுகிறேனோ?’

 

English Translation

I stand and call from deep inside in my Karmic tomb and flounder through many dismal paths.  Then my Lord did grace the cows and walk the Earth.  O where can I find him now?

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top