(3140)
கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன்,
மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்,
தாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே?
பதவுரை
|
கொடு வினை |
– |
கொடிய பாவங்களுக்குப் பிறப்பிடமாகிய |
|
தூற்றுள் நின்று |
– |
நுழைந்தால் வெளிப்பட முடி(யாத) புதர் போன்ற ஸம்ஸாரத்தில் அகப்பட்டு நின்று |
|
பல காலம் |
– |
அநேக காலம் |
|
வழி திகைத்து |
– |
வழி தெரியாமல் சுழன்று |
|
அலமருகின்றேன் |
– |
வருந்திக் கிடக்கின்ற |
|
பாவியேன் |
– |
மஹாபாபியான நான் |
|
அன்று |
– |
முன்பொருகால் |
|
மேவி |
– |
திருவள்ளமுவந்து |
|
ஆ நிரை |
– |
பசுக்கூடட்ங்களை |
|
காத்தவன் |
– |
ரக்ஷித்தவனும் |
|
உலகம் எல்லாம் தாவிய |
– |
(த்ரிவிக்ரமனாய்) உலகங்களையெல்லாம் அளந்தவனுமாகிய |
|
அம்மானை |
– |
ஸ்வாமியை |
|
இனி |
– |
இனி |
|
கூவி கூவி |
– |
பலகாலும் கூப்பிட்டு |
|
எங்கு |
– |
எங்கே |
|
தலைப்பெய்வன் |
– |
கிட்டுவேன்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்ரீகிருஷ்ணனாயும் ஸ்ரீவாமநனாயும் அவதரித்து உலகுக்குப் பண்ணின அநுக்ரஹத்திற்குத் தப்பின நான் இனி யுன்னைப் பெறுதற்கு வழியுண்டோவென்று க்லேசந்தோற்றப் பேசுகிறார். பிரானே! நான் இருக்குமிடமோ ஸம்ஸாரம்; இதுவோ தூறு மண்டிக்கிடக்கிறது. இங்கிருந்து கிளம்ப வழியில்லை. இருந்தவிடத்தில் நின்றும் பலகாலும் கூப்பிடாநின்றேன். நீ ஆபத்துக்கு உதவுபவனல்லையாகில் நான் இவ்வளவு கூப்பீடு செய்யமாட்டேன்; திருவாய்ப்பாடியில் பசுக்களெல்லாம் பெரு மழையில் நோவு பட்டக்காலத்தில் ஒன்றின்மேல் ஒரு துளி விழாதபடி ஒரு மலையைத் தூக்கியெடுத்து ரக்ஷித்தாய்* அங்ஙனம் ஒரு ஊர்க்கு உதவின மாத்திரமன்றிக்கே எங்குமொக்க எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்தருளினாய்; அன்று நான் எந்த மூலையிலே கிடந்தேனோ? அப்படி ஸர்வஸ்வதாகம் பண்ணின காலத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்புகுகிறேன்? அஸாத்யமான விஷயத்தில் நாம் நசை பண்ணுவது வீண் என்று தெரிந்தும் வாளா இருக்க மாட்டிற்றிலேன்; கூப்பீடே போதுபோக்காக விருக்கின்றேன் என்றாராயிற்று.
கொடுவினைத்தூற்றுள் நின்று” என்றவிடத்திற்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- கூப்பீடு கேட்டு இரங்கியெடுப்பதாக ஈச்வரன் கை நீட்டினால், நீட்டினகை வாங்கவொண்ணாத நிலத்திலேயிற்றுக் கூப்பிடுவது”
பாவியேன் என்றவிடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை:- ஸ்ரீஜநகராஜன் திருமகள் ஸ்ரீவால்மீகிபகவானாஸ்ரமபரிஸரத்திலே கூப்பிட்டாப்போலே, சிலர் ஐயோவென்னக் கூப்பிடுகிறேனோ?’
English Translation
I stand and call from deep inside in my Karmic tomb and flounder through many dismal paths. Then my Lord did grace the cows and walk the Earth. O where can I find him now?
