(3139)
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்,
ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,
பாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே,
கூவுகின்றேன் காண்பான் எங்கொய்தக் கூவுவனே?
பதவுரை
|
துன்பம் மேவு |
– |
பலவகைத் துயரங்களை விளைக்கவல்ல |
|
வினைகளை |
– |
பாவங்களை |
|
ஓவுதல் இன்றி |
– |
இடையறாமல் |
|
உன் கழல் |
– |
உனது திருவடிகளை |
|
வணங்கிற்றிலேன் |
– |
பணிவதும் செய்திலேன் |
|
பாவு |
– |
எங்கும் பரவிய |
|
தொல் |
– |
இயற்கையான |
|
சீர் |
– |
திருக்குணங்களையுடைய |
|
விடுத்தும் இலேன் |
– |
(தவன் முதலியவற்றால்) போக்கடித்துக்ö காண்டேனுமில்லை |
|
கண்ணா |
– |
கண்ணபிரானே! |
|
என் |
– |
எனது விருப்பத்திற்குரிய |
|
பாஞ்சுடரே |
– |
மேலான ஒளியுருவனே! |
|
காண்பான் |
– |
(உன்னைக்) காணும்பொருட்டு |
|
கூவுகின்றேன் |
– |
கூப்பிடுகின்றேன். |
|
எங்கு எய்த கூவுவன் |
– |
எங்கே கிட்டுவதாகக் கூப்பிடுவேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானே! உன்னைப் பெறுகைக்கு நான் ஏதேனும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணியிருந்தேனாகில் அந்தப் பற்றாசுதன்னை வைத்துக் கொண்டாவது ‘ஏன் நமக்கு இன்னமும் இரங்கி யருளவில்லை?’ என்று நான் கரைந்து கூப்பிடலாம்; நானோ ஒரு ஸாதாநாநுஷ்டாநமும் பண்ணாதவன்; அப்படியிருந்தும், ஸாதநங்களை நிறைய அநுஷ்டித்துப் பலன் கைபுகப் பெறாதவன் கிடந்து துடிக்குமாபோலே நானும் துடித்துக் கதறுகின்றேனே! இது என்ன! என்று தமக்குத்தாமே விஸ்மயப் பட்டுக் கொள்ளுகிறார்.
மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன் = நாம் செய்கிற தீவினைகளை நல்வினைகளினால் போக்கிக் கொள்ள வேணுமென்பது நூற்கொள்கை; நானோ பாவங்களை மாத்திரஞ் செய்தேனேயன்றி அவற்றைப் போக்கவல்ல நற்கிரிசை யொன்றுஞ் செய்திலேன். எள்ளில் எண்ணெய்போலவும், கட்டையில் நெருப்புப் போலவும், இவ்வாத்மாவோடு பிரிக்க முடியாதபடி பொருந்தியிருப்பனவும் பலபல துன்பங்களை வினைப்பனவுமான பாபங்களை விஹிதகர்மாநுஷ்டானத்தாலே போக்கிக் கொண்டேனில்லை.
ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன் = உன் திருவடிகளை நிரந்தரமாக பஜிப்பதும் செய்திலேன் என்கிறார். முதலடியினாலேயே இவ்வர்ததம் ஏற்பட்டுவிட்டாலும் ஆழ்வார் தம் ஆர்த்தியின் கனத்தினால் விவரித்துக் கூறுகிறாரென்று கொள்க. இங்கு ஓவுதலின்றி என்பதை மத்யமதீபமாகக்கொண்டு முதலடியோடும் இரண்டாமடியோடும் கூட்டி நிர்வஹிப்பர் எம்பார்; இப்போது, ஓவுதலின்றி என்பதற்கு ஓய்வு இல்லாமையினாலே என்று பொருள். எனக்குள்ள அவகாசமெல்லாம் தீவினைகளைச் செய்வதற்கே சரிப்பட்டுப்போயின; ஒரு நல்வினை செய்யவும் அவகாசம் கிடைக்கவில்லை; ஆதலால்- என்றபடி. “கண்ணாலப் பெண்டாட்டிக்கு உண்ண அவஸரமில்லை என்னுமாபோலே இந்த்ரியங்களுக்கு இரையிட்டுத் திரிந்தேனித்தனை; எனக்கு ஒன்றும் ஹிதம் பார்த்திலேன்” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தி பரமபோக்யம்.
பரவு தொல் சீக்க்கண்ணா!- நான் அயோக்யனாயிருந்தாலும் உனது திருக்குணங்களை நினைக்குங்கால் மேல் விழுந்தாகிலும் புஜிக்கவேண்டும்படியிரா நின்றதே! விட முடியவில்லையே! என் செய்வேன்! என்கிற ஆர்த்தி சொல்வடிவத்திலே தோன்றுமாறு காண்க. பாவுதல்- பரவுதல்; பக்தர்களின் கோஷ்டிகளில் மாத்திரமன்று; சத்ருக்களின் கோஷ்டிகளிலும் பரவிய புகழ்படைத்தவனென்பர்.
English Translation
O Lord Krishna, my eternal glory-flood! Alas, I have not ceased my lowly Karmas not relentlessly worshipped your lotus feet, “Krishna”, I call, O where can I see you?
