(3138)

(3138)

எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே

மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி,

எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற,

மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே?

 

பதவுரை

நெஞ்சே!

மனமே

இருந்து இருந்து

நிரந்தரமாக

இரங்கி

வருந்தி

மெய் ஞானம் இன்றி

யதார்த்த ஞானமில்லாமையாலே

வினை இயல் பிறப்பு

பாபங்களின் பலனாக சேர்ந்த ஜன்மங்களிலே

அழுந்தி

ஆழங்காற்பட்டு

நாம்

(இதுவே யாத்திரையாக இருக்கிற நாம்

எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற

எல்லாக் காலத்திலும் எல்லாப் பொருள்களிலும் ஒன்றும் விடாலே பரிபூர்ணமாக வியாபித்து நிலைபெற்றிருக்கின்றவனும்.

மெய்ஞானம் சோதி

விசதமான ஜ்ஞானப்ரபையை யுடையவனுமான

கண்ணனை

ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை

எஞ்ஞான்று மேவுவதும்

என்னைக்குக் கிட்டக் கடவோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “நின்நற்பொற் சோதித்தாள்” என்று திருவடியின் பரம போக்யதையின் ப்ரஸ்தாவம் வரவே அந்தத் திருவடி விஷயத்தில் நெஞ்சுக்கு ஒரு பதற்றம் உண்டாயிற்று; அது கண்ட ஆழ்வார் நெஞ்சை நோக்கி, ‘கெடுவாய்! உனது நிலைமையை ஆராயாது நல்லதையாசைப்பட்டால் அது உனக்குக் கிடைக்குமோ?” என்கிறார்.

“எஞ்ஞான்று நாம்” என்றவிடத்து, ‘எஞ்ஞான்று’ என்றும் பிரிக்கலாம். ‘எஞ்ஞான்றும்’ என்றும் பிரிக்கலாம். பூருவாசாரியர்களுக்கு இரண்டுவகையும் உடன்பாடே ‘எஞ்ஞான்று’ என்று பிரித்தால் ‘மேவும்’ என்ற வினைமுற்றோடே அந்வயிக்கும். எஞ்ஞான்று மேவுதும்- என்றைக்கு அடைவோம்? என்றைக்கும் அடைய வழியில்லையென்பது குறிப்பு. ‘எஞ்ஞான்றும்’ என்று கொண்டால் பக்கத்திலேயே அதற்கு அந்வயமாகும். எப்போது மிரங்கி என்றவாறு. இப்பக்ஷரத்தில் ‘மேவுததுமே என்றவிடத்து ஏகாரம் எதிர்மறையாய் மேவமாட்டோமென்றவாறாம்.

நல்ல ஞானமின்றிக்கே அஜ்ஞாநவிசேஷங்களையும் துஷ்கர்மவிசேஷங்களையும் பிறப்பிக்கின்ற ஸம்ஸாரத்திலே அழுந்திக்கிடக்கிற நாம், நெஞ்சே! காலமுள்ளதனையும் ஓயாமல் துக்கப்பட்டுக் கிடப்பது தவிர, ஸர்வஜ்ஞனாய் ஸர்வவ்யாபகனான பெருமானைக் கிட்டி மகிழ்வதற்கு ப்ரஸக்தியுண்டோ? என்றாராயிற்று.

 

English Translation

O Heart of mine, benefit of true knowledge, you suffer endless karmic birth.  O when will we join our knowledge-Lord, the radiant Krishna who lives in all forever?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top