(2897)

(2897)

இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்

என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய

துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே

அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.

 

பதவுரை

இன்பு உற்ற

–

ஆநந்தபூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்யகுணமுடைய

சீலத்து இராமாநுசா

–

எம்பெருமானாரே!

சொல்லுவது ஒன்று உண்டு

–

தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டியவிஷயம் ஒன்றுண்டு

என்பு உற்ற நோய் உடல் தோறும்

–

எலும்பிலே உறைந்து நலியக்கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம்

பிறந்து இறந்து

–

பிறப்பதும் இறப்பதுமாகி

எண்ண அரிய துன்பு

–

எண்ணமுடியாததுன்பங்களை யநுபவித்து

உற்ற வீயினாம்

–

முடிந்து போனாலும்

என்றும்

–

எல்லாக்காலங்களிலும்

எவ் இடத்தும்

–

எல்லாவிடங்களிலும்

உன் தொண்டர்கட்கே

–

தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே

அன்பு உற்று இருக்கும்

–

பக்தனாயிருக்கும் படி

படி என்னை ஆக்கி

–

அடியேனைச் செய்தருளி

அங்கு

–

அந்த பக்தர்களிடத்தில்

ஆள் படுத்து

–

(அடியேனை) ஆட்படுத்தி யருளவேணும்;

(இதுவே அடியேனுடைய வேண்டுகோள்)

 

English Translation

O Sweet-natured Ramanuja! I have something to ask of you. At all times in all places, no matter how many countless painful births and deaths I pass through in this cage of flesh and bones, you must fill my heart with love for your devotees and make me serve their feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top