(2896)
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே.
பதவுரை
|
மாயனாக்கு |
– |
ஸர்வேச்வரனாக்கு |
|
இருப்பு இடம் |
– |
வாஸஸ்தானம் (எவை யென்றால்) |
|
வைகுந்தம் |
– |
பரமபதமும் |
|
வேங்கடம் |
– |
திருவேங்கடமலையும் |
|
மாலிருஞ் சோலை என்னும் பொருப்பு இடம் |
– |
திருமாலிருஞ் சோலையென்கிற திருமலையும் (ஆகிய இவையாம்) |
|
என்பர் கல்லோர் |
– |
என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள். |
|
மாயன் |
– |
(இவற்றை இருப்பிடமாகவுடைய) ஸர்வேச்வரன் |
|
அவை தன்னொடும் |
– |
அந்த ஸ்ரீவைகுண்டம் முதலியவற்றோடே கூடவந்து எழுந்தருளி யிருப்பது |
|
வந்து இருப்பிடம் |
– |
எம்பெருமானாருடைய |
|
இராமாநுசன் மனத்து |
– |
திருவுள்ளத்திலேயாம்; |
|
அவன் |
– |
அவ்வெம்பெருமானார்தாம் |
|
இன்று வந்து |
– |
இப்போது வந்து |
|
தனக்கு இன்பு உற இருப்பிடம் |
– |
தமக்கு ஆநந்தமாக எழுந்தருளி யிருப்பது |
|
என் தன் இதயத்து உள்ளே |
– |
அடியேனுடைய ஹ்ருத யத்தினாள்ளேயாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டிற் கூறியபடியே அமுதனாருடைய எல்லை கடந்த ப்ராவண்யத்தை அறிந்த எம்பெருமானார் ‘நம்மேல் இவ்வளவு காதல் கொண்டிருக்கிற இவருடைய நெஞ்சை நாம்விட்டு நீங்கலாகாது, என்று கொண்டு அமுதனாருடைய திருவுள்ளத்தை மிகவும் விரும்பியருள, அதனைக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார்.
English Translation
The good ones say that Vaikunta, Venkatam, and Malirumsolai hills are the celebrated abodes of the wonder-lord. Along with these, the lord has also come to reside in Ramanuja’s heart. He, in turn, has come to reside sweetly in my heart.
