(2897)
இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.
பதவுரை
|
இன்பு உற்ற |
– |
ஆநந்தபூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்யகுணமுடைய |
|
சீலத்து இராமாநுசா |
– |
எம்பெருமானாரே! |
|
சொல்லுவது ஒன்று உண்டு |
– |
தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டியவிஷயம் ஒன்றுண்டு |
|
என்பு உற்ற நோய் உடல் தோறும் |
– |
எலும்பிலே உறைந்து நலியக்கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம் |
|
பிறந்து இறந்து |
– |
பிறப்பதும் இறப்பதுமாகி |
|
எண்ண அரிய துன்பு |
– |
எண்ணமுடியாததுன்பங்களை யநுபவித்து |
|
உற்ற வீயினாம் |
– |
முடிந்து போனாலும் |
|
என்றும் |
– |
எல்லாக்காலங்களிலும் |
|
எவ் இடத்தும் |
– |
எல்லாவிடங்களிலும் |
|
உன் தொண்டர்கட்கே |
– |
தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே |
|
அன்பு உற்று இருக்கும் |
– |
பக்தனாயிருக்கும் படி |
|
படி என்னை ஆக்கி |
– |
அடியேனைச் செய்தருளி |
|
அங்கு |
– |
அந்த பக்தர்களிடத்தில் |
|
ஆள் படுத்து |
– |
(அடியேனை) ஆட்படுத்தி யருளவேணும்; |
|
(இதுவே அடியேனுடைய வேண்டுகோள்) |
||
English Translation
O Sweet-natured Ramanuja! I have something to ask of you. At all times in all places, no matter how many countless painful births and deaths I pass through in this cage of flesh and bones, you must fill my heart with love for your devotees and make me serve their feet.
