(2898)

(2898)

அங்கயல் பாய்வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்

பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்

தங்கிய தென்னத் தழைத்துநெஞ்சே! நந் தலைமிசையே

பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூமன்னவே.

 

பதவுரை

நெஞ்சே

ஓ மனமே!

பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து

பக்தியெல்லாம் நம்மிடத்திலே குடிகொண்ட தென்று சொல்லும்படியாக வீறுபெற்று,

பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ

பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள்

நம் தலைமிசையே மன்ன

நமது தலைமேலே நித்ய வாஸம் பண்ணும்படியாக,

(நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால்)

அம் கயல் பாய் வயல் தென் அரங்கன்

அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானாடைய

அணி ஆகம் மன்னும்

அழகிய திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிறவளாய்

பங்கயம் மா மலர் பாவையை

சிறந்த தாமரைப் பூவில் பிறந்தபதுமை போன்றவளான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை

போற்றதும்

வாழ்த்துவோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பிரபந்தத்தின் தொடக்கத்தில் “இராமாநுசன் சரணாவிந்தம் நாம் மன்னிவாழ” என்று எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளைப் பொருந்திவாழ்வதே தமக்குப் பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தவராகையாலே அந்தப் புருஷார்த்தம் நமக்கு யாவஜ்ஜீவம் ஹித்திக்கும்படியாக -எல்லாச் செல்வங்களையும் அளிக்கவல்ல பெரிய பிராட்டியாரைப் பிரார்த்திப்போமென்கிறார்-முடிவான இப்பாட்டில். ஸாமாந்ய ஸம்பத்தை அளிக்கவல்ல பிராட்டியே இந்த விசேஷ ஸம்பத்தையும் அளிக்கக் கடவுள் என்றதாயிற்று.

 

English Translation

I saw in my eyes the dark gem-hued Lord, resplendent with the war-waging discus and conch.  He came as a manikin then and strode the Earth with great feet, O. How he grew and became worshipped by the seven worlds!

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top