(2872)

(2872)

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீவினையால்

உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்

பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ!

தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே.

 

பதவுரை

தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது

–

தெளிவான ஞானத்தைச் சேரப்பெறாமல்

வெம் தீ வினையால்

–

மிகவுங் கொடிகான கருமத்தாலே

உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை

–

உபயோகமற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலையில்லாமல்) திரிகிற என்னை

ஒரு பொழுதில்

–

ஒரு க்ஷணகாலத்தில்

பொருவு  அற்ற கெள் வயன் ஆக்கி நின்றான்

–

ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கியருளினவரும்

தெரிவு உற்ற கீர்த்தி

–

ப்ரஸித்தமான புகழை யடையவரும்

சீர் முகில் என்னும்

–

(ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான

இராமாநுசன்

–

எம்பெருமானார்

என்ன புண்ணியனோ

–

என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.)

 

English Translation

I was an ignorant one, without proper knowledge, roaming around with faulty understanding in a trice. Ramanuja made me a peerless learned one, and stood aside, while the world raved and said, “What a blessed one!”. He is famed for his benevolence that matches the raincloud.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top