(2873)

(2873)

சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும்

பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம்

ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய

கார்கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டுகொள்ளே.

 

பதவுரை

இராமநுசா

–

எம்பெருமானாரே!,

சீர் கொண்டு

–

சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய்

பேர்அறம் செய்து

–

சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து

நுல் வீடு செறிதும் என்னும்

–

பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற

பார்கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன்

–

ப்ரஸித்தமான ப்ரபாவத்தையுடைய ப்ரபாவத்தையுடைய ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்;

உன் பதயுகம் ஆம்

–

தேவரீருடைய உபய பாதங்களாகிற

ஏர் கொண்ட வீட்டை

–

பரம விலக்ஷணமான மோக்ஷத்தை

எளிதினில் எய்துவன்

–

ஸுலபமாக அடைந்திடுவேன்;

கார் கொண்ட

–

(ஔதார்யத்தில்) மேகத்தைவென்றிருக்கிற தேவரீருடைய

வண்மை இது

–

ஔதார்யம் இப்படிப்பட்டது;

கண்டுகொள்

–

தேவரீரே இதனைக்கண்டு கொள்ளலாம்.

(அடியேன் சொல்ல வேணுமோ?)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சரமச்லோகத்திலே கண்ணபிரான் நியமித்தபடியே நாம் சரணாகதியை அநுஷ்டித்து விட்டோமாகையால் நமக்கு மோக்ஷம் கைபுகுந்துவிட்ட தேயாமென்று அறுதியிட்டிருக்கும் மஹான்களில் அடியேன் சோர்ந்தவனல்லேன்; அப்படி அடியேன் ஒன்றும் அநுஷ்டிக்கவில்லை. தேவரீருடைய திருவடிகளாகிற மோக்ஷத்தை அடைந்திடத் தடையில்லை யென்கிறமனவுறுதியே அடியேனுக்குள்ளது என்றாராயிற்று.

 

English Translation

O Ramanuja! I am not one among the noble ones of the world who practise the exalted path of Bhakti-yoga and attain the perfect freedom of Maksha. Effortlessly, I will attain the great liberation of Vaikunta, through your dark-cloud-like benevolence, – just see!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top