(2874)

(2874)

கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே

தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்

விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்று

உண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.

 

பதவுரை

எம் இராமாநுசன் தன்னை

–

ஸ்வாமி எம்பெருமானாரை

இன்று கண்டு கொண்டேன்

–

இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்;

காண்டலுமே

–

இப்படி தெரிந்து கொண்டவளலிலே

அவன் தொண்டர் பொன் தாளில்

–

அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில்

தொண்டு கொண்டேன்

–

அடிமைப்பட்டேன்; (அதனால்)

என் தொல்லை வெம் நோய்

–

எனது பழைய கொடு வினைகளை

விண்டு கொண்டேன்

–

நீக்கிக்கொண்டேன்,

அவன் சீர் வெள்ளம் வாரியை

–

அவருடைய கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை

வாய் மடுத்து உண்டு கொண்டேன்

–

வாயார அநுபவிக்கப் பெற்றேன்;

இன்னம் உற்றன

–

இப்படியாக இன்னமும் நான் பெற்ற நன்மை களை

ஒதில்

–

சொல்லத்தொடங்கினால்

உலப்பு இல்லை

–

(அதுக்கு) ஒரு முடிவு கிடையாது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இனிமேலும் எம்பெருமானார் திருவருளால் நான் பெறப்போகிற நன்மைகள் அளவற உண்டு; எனினாம் இன்றளவும் நான் பெற்ற பேறுகளுக்கு எல்லையுண்டோ வென்றாராயிற்று.

 

English Translation

I have found my Ramanuja; by which act, I have become a servant of his devotees feet; by which process, I have cut as under my age-old karmic ills. Today I have drunk deep from the river of his glory-flood.  If I were to say more, there will be no end to it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top