(2871)

(2871)

சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால்

சார்வின்றி நின்ற எனக்கு,அரங்கன்செய்ய தாளிணைகள்

பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனியுன்

சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே.

 

பதவுரை

உன் தன் துணை அடிகீழ் சோர்வு இன்றி

–

தேவரீருடைய உபய பாதங்களின் கீழே

தொண்டுபட்டவர் பால்

–

சோராமல் அடிடைப்பட்டவர்கள் விஷயத்தில்

சார்வு இன்றி நின்ற எனக்கு

–

பொருத்தமில்லாமலிருந்த எனக்கு

இன்று

–

இன்றைத்தினத்தில்

அரங்கன் செய்ய தான் இணைகள்

–

பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடியினைகளே

பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா

–

ஒருகாலும்வுட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனானாரே!

இனி

–

இப்படியான பின்பு

தெரிவுறில்

–

ஆராயுமளவில்

உன்

–

தேவரீருடைய

சீர் ஒன்றிய கருணைக்கு

–

சிறந்த திருவருளுக்கு

மாறு இல்லை

–

ஒப்பு இல்லை

 

English Translation

O Ramnuja! I served the fireless devotees of your perfect feet. You gave me the red lotus feet of the lord of Arangam himself forever! I have nothing to give in return for your boundless compassion.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top