(2870)

(2870)

நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப

வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,அவர்க்கே

எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்

சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே.

 

பதவுரை

நல்லார் பரவும் இராமாநுசன்

–

ஸத்துக்களாலே கொண்டாடப்படுகிற எம் பெருமானாருடைய

திருநாமம்

–

திருநாமத்தை

நம்ப வல்லார் திறத்தை

–

(தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்க வல்லவர்களுடைய படிகளே

மறவாதவர்கள் எவர்

–

மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ,

அவர்க்கே

–

அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே

எல்லா இடத்திலும்

–

ஸகல தேசங்களிலும்

என்றும்

–

ஸகல அவஸ்தைகளிலும்

எததொழும்பும்

–

ஸகலவித கைங்கரியங்களையும்

சொல்லால் மனத்தால் கருமத்தினால்

–

மனமொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும்

சோர்வு இன்றி செய்வன்

–

பிரியாதே யிருந்து செய்வேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய நிலைநின்ற நிஷ்டையைப் பேசுகிறார் இதில். ஸத்துக்களனைவரும் கொண்டாடும்படியான எமபெருமானுடைய திருநாமங்களையே தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்கிற மஹான்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமாநுஜ பக்தபக்தர்களுக்கே அடியேன் – ஒமிவில் காலமெல்லாம் உடனய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யக்கடவே னென்றாராயிற்று. தொழும்பு = அடிமை.

 

English Translation

To those who recall the good ones who praise Ramanuja and place their faith in his name alone –to them and them alone, I shall give my service in thought, word and deed without fatigue, at all times at all places, in all climes.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top