(2869)
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே
மெய்மைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை
உய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே
ஐயப் படாநிற்பர் வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே.
பதவுரை
|
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து |
– |
பொய்யான விஷயத்தையே மேன்மேலும் வெளிப் படுத்துகிற (புற மதத்தவர்களின) அர்த்தங்களைக் கண்டித்து |
|
இந்த பூதலத்தே |
– |
இப்பூமியிலே |
|
மெய்யை புரக்கும் |
– |
ஸத்யத்தை ரக்ஷிக்கிற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
|
நிற்க |
– |
எழுந்தருளி யிருக்கும் போது |
|
(இவரைக் கணிசியாமல்) |
||
|
வையத்து உள்ளோர் |
– |
இப்பூமியிலுள்ளவர்கள் |
|
நம்மை உய்யக் கொள்ள வல்ல |
– |
நம்மை உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடிய |
|
வேறு தெய்வம் இங்கு யாது என்று |
– |
வேறு எதாவது தேவதை இவ்வுலகில் உண்டோ என்று விசரித்துக் (கொண்டு) |
|
உலர்ந்து |
– |
மன வருத்தத்தாலே உடம்பு உலர்ந்து |
|
நல் அறிவு இமந்து |
– |
(எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருக்கையாகிற) நல்ல ஞானம் பெறாமல் |
|
அவமே |
– |
வீணாக |
|
ஐயம் படா நிற்பர் |
– |
ஸம்சயப்படா நின்றார்கள் ஐயா! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பொய்யைச் சுரக்கும் பொழுளென்றது -பொய் தவிர வேறில்லாத அர்த்தம் என்றபடி “ஸர்வம்அஸத்யம்” என்கிறாவர்களாகையாலே அஸத்யமயம். மெய்யைப் புரக்கு மிராமாநுசன் = “யதார்த்தம் ஸர்வவிஜ்ஞாநம்” என்று ஸ்தாபித்தருளினவர். புரத்தல்- காப்பாற்றுதல்.
English Translation
When Ramnuja stands in this world as the guardian of truth and destroyer of false doctrinal interpretations, alas, people of the world go searching for another god and wither away, lose their minds, and spend their lives in doubt.
