(2863)

(2863)

வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும்

தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய்

உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்

திண்மையல் லாலெனக் கில்லை, மற்றோர்நிலை தேர்ந்திடிலே.

 

பதவுரை

தன் வண்மையினாலும்

–

தம்முடைய ஔதார்ய குணத்தாலும்

மா தகவாலும்

–

பரமக்குபையாலும்

மதி புரையும் தண்மையினாலும்

–

சந்திரனையொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும்

இத்தரணியோர்கட்கு

–

இப்பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு

உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை

–

யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தைஉப தேசிக்கிற எம்பெருமானாரை

உன்னும் திண்மை அல்லால்

–

சிந்கிப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர

தேர்ந்திடில்

–

ஆராயமளவில்

எனக்கு மற்று ஒர் நிலை இல்லை

–

அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை.

 

English Translation

With exceeding benevolence, compassion and moon-like tranquil patience, Ramanuja gave refuge to the world and taught the truth and wisdom of the Vedas. Come to think, other than contemplating his feet, I have no desire.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top