(2864)
தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மை
ஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில்
சேரா தவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தைசெய்தே.
பதவுரை
மறையின் திறம் தேரார் என்று |
– |
(இப்பாலிகள்) வேதஞ் சொல்லிகிற வழியை நிரூலித்திகிற தில்லையென்று |
தீயவரை |
– |
பாவிகளை |
மாயவன் |
– |
எம்பெருமான் |
குறைப்பது |
– |
தண்டிப்பது |
கூர் ஆழி கொண்டு |
– |
கூர்மையான தனது திருவாழியாலே; |
கொண்டல் அனையவண் மை |
– |
மேகம்போன்ற ஔதார்யகுண முடையவரும் |
ஏர் ஆர் குணத்து |
– |
(மற்றும்) பல நல்லகுணங்களுடையவருமான |
எம் இராமாநுசன் |
– |
ஸ்வாமி எம்பெருமானார் |
அ எழில் மறையில் சேராதவரை சிதைப்பது |
– |
அந்த சிறந்த வேதத்தில் அந்வயியாதவர்களே பங்கப் படுத்துவது (எப்படி யென்றால்) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் தனது ஆஜ்ஞாரூபமான வேதங்களின் கட்டளைப்படி நடவாத கொடியவர்களைத் தனது திருவாழியைக் கொண்டு த்வம்ஸம் பண்ணிவிடுவன்; எம்பெருமானாரோவென்னில் அவ்வளவு ஆயாஸம் எடுத்துக்கொள்வதில்லை; மேதங்களை அடியோடு ஒப்புக்கொள்ளாத பாஹ்யர்களையும்,வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக்கொண்டு அவற்றில் அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளையும் வாதப்போரில் அப்போதப்போது திருவுள்ளத்தில் ஸ்புரிக்கின்ற நல்லயுக்கிகளைக்கொண்டு கண்டித்து விடுவர் என்கை.
English Translation
With his fierce discus of time, the wonder Lord wipes out the wicked ones that do not follow the Vedic path, whereas the cool-as-the-raincloud Ramanuja convinces them through reason and brings them into the radiant Vedic path.