(2865)

(2865)

செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்

கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே

மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே

மொய்த்தலைக் கும்வந்து இராமா னுச! என்னை முற்றுநின்றே.

 

பதவுரை

செய் தலை

வயல்களில்

சங்கம்

சங்குகளானவை

செழு திரு முத்தம்

அழகிய முத்துக்களை

ஈனாம் திரு அரங்கர்

உண்டாக்கு மிடமான திருவாங்கமா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள்

கைத்தலத்து

தமது திருக்கையிலே

ஆழியும் சங்கமும் எந்தி

திருவாழிதிருக்கையிலே தரித்துக் கொண்டு

நம் கண் முகப்பே

நமது கண்ணெதிரில்

மொய்த்து

வந்து நெருங்கி

அலைத்து

புத்தியைக் கெடுத்து

உண்னை விடேன் என்று இருக்கிலும்

உன்னை விடமாட்டேன் என்று இருந்தாலும்

இராமாநுசா

எம்பெருமானரே

நின் புகழே

தேவரீருடைய திவ்ய குணங்களே

என்னை வந்து முற்றம் மொய்த்து  நின்று

என் பக்கல் வந்து சூழ்ந்துகொண்டு

அலைக்கும்

ஆகர்ஷிக்கின்றன

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் தனது விலக்ஷணமான அழகைக் காட்டிக் கொண்டு வந்து என்கண்னெதிரே நின்றாலும், என்னை விடாதே வலியப்பற்றினாலும் அவனது அழகில் நான் மோஹிக்கப் பெறுவதில்லை; தேவரீருடைய திருக்குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன பகவத் குணங்களை நான் ஈடுபடுவதில்லை; தேவருடைய திருக்குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன. பகவத் குணங்களுக்கு நான் ஈடுபடுவதில்லை யென்றாராயிற்று.

“செய்த் தலைச்சங்கம் செழுமுத்தமீனாம்” என்கிற விசேஷணம்-திருவரங்கர் என்பதன் பகுதியாகிய திருவரங்கத்தில் அந்வயிக்கும். திருவரங்கம் எப்படிப்பட்டதென்றால், முத்துக்களை யுதிர்க்கும் சங்குகள் நிறைந்த வயல் சூழ்ந்தது என்றவாறு. ஈனாதல்-பிரஸவித்தல்.

 

English Translation

O Ramanuja! The Lord of Arangam surrounded by watered fields that throw up pearls and conches, wields a conch and discus in his beautiful hands and remains in our eyes forever saying, “I shall never leaves you”, Yet your glory enguifs me completely and tosses me like one possessed.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top