(2866)
நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
என்றனக் கும்அது,இராமா னுச! இவை யீந்தருளே.
பதவுரை
இராமாநுச |
– |
எம்பெருமானாரே! |
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை |
– |
நிலைநின்ற பெரும் புகழும் அதிகமான நீர்ப்பெருக்கும் நிறைந்துள்ள |
வேங்கடம் பொன் குன்றமும் |
– |
திருவேங்கட மென்னும் அழகிய திருமலையும் |
வைகுந்தம் நாடும் |
– |
ஸ்ரீ வைகுண்டமாகிய திருநாடும் |
குவலிய பால் கடலும் |
– |
கொண்டாடத்தக்க திருப்பாற்கடலும் |
உன் தனக்கு |
– |
தேவரீருக்கு |
எத்தினை இன்பம் தரும் |
– |
எவ்வளவு ஆநந்த்தை விளைக்குமோ |
உன் இணை மலர் தாள் |
– |
தேவரீருடைய உபயபாதாரவிந்தங்கள் |
என் தனக்கும் அது |
– |
எனக்கும் அவ்வளவு ஆநந்தத்தை யுண்டாக்கும்; |
இவை |
– |
இப்படிப்பட்ட திருவடிகளை. |
ஈந்தருள் |
– |
அடியேனுக்குத் தந்தருள வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் அமுதனார் விளக்கிய பரமபக்தியை அறிந்த எம்பெருமனார் மிகவும் உகந்தருளி ‘இவருக்கு நாம் எதை செய்வோம்’ என்றிருப்பதாகக் கண்ட அமுதனார், ஸ்வாமிந்! அடியேனுக்கு தேவரீர் வேறொன்றும் செய்தருள வேண்டர் அடியேனுக்கு ஸர்வஸ்மாகிய இந்தத் திருவடித்தாமரைகளைச் தந்தருள வேண்டுமத்தனை யென்கிறார்.
English Translation
O Ramanuja! Put together the joy that you derive from the famous stream-flowing Venkatam hills, the world of Vaikunta, and the fabled Ocean of Milk; I derive that same joy from contemplating your lotus feet. Pray grant me this.