(2867)
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல்பொருளால்,இப்படிய னைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே?
பதவுரை
ஈயாத |
– |
(இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத |
இன் அருள் |
– |
விலக்ஷணமான க்ருபையை |
ஈந்தனன் |
– |
அடியேனுக்குச் செய்தருளின வரும் |
எண் இல் மறை குறும்பை |
– |
எண்ணிறந்த வேத விரோதிமதங்களை |
அம்மறை பல்பொருளால் பாய்ந்தனன் |
– |
அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும் |
கீர்த்தியினால் |
– |
தமது கீர்த்தியாலே |
இப்படி அனைத்தும் எய்ந்தனன் |
– |
இப்பூமியெங்கும் வியாபித்தவரும் |
என் வினைகளை |
– |
எனது கருமங்களை |
வேர்பறியகாய்ந்தனன் |
– |
வேரோடே அரும் படி போக்கினவரும் |
வண்மை |
– |
ஔதார்யமே வடிவு கொண்ட வருமான |
இராமாநுசற்கு |
– |
எம்பெருமானார்க்கு |
இனி என் கருத்து |
– |
இன்னமும் (செய்யத்தக்கதாகத்) திருவுள்ளத்தில் ஏதேனா முண்டோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் தாம் அபேக்ஷித்தபடியே திருவருளைத் தந்தருளப்பெற்று, க்ருதக்ருத்ய ராய், அவர் செய்தருளின உபகாரங்களை அநுஸந்தித்து, இவையெல்லாம் செய்தபின்பு இன்னமும் செய்தருள்வதாகத் திருவுள்ளம் பற்றிருப்பது எதுவோ என்கிறார்.
மறைக்குறும்பாவது- வேதத்திற்கு மாறாகச்சொல்லும் தப்புப் பொருள்கள். ஈந்தனன் பாய்த்தனன், எய்ந்தன், காய்ந்தனன், என்பவற்றை வினைமுற்றாகலே கொண்டு உரைத்தலுமாம்.
English Translation
Ramanuja showered his benevolent grace beyond the mind’s imagination. With the authority of Vedic texts he has cleared the path of heretic thoughts. His fame has spread all over the world. He has weeded out my karmas by the root. I wonder what the able one intends to do next.