(2863)
வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும்
தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய்
உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
திண்மையல் லாலெனக் கில்லை, மற்றோர்நிலை தேர்ந்திடிலே.
பதவுரை
தன் வண்மையினாலும் |
– |
தம்முடைய ஔதார்ய குணத்தாலும் |
மா தகவாலும் |
– |
பரமக்குபையாலும் |
மதி புரையும் தண்மையினாலும் |
– |
சந்திரனையொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும் |
இத்தரணியோர்கட்கு |
– |
இப்பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு |
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை |
– |
யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தைஉப தேசிக்கிற எம்பெருமானாரை |
உன்னும் திண்மை அல்லால் |
– |
சிந்கிப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர |
தேர்ந்திடில் |
– |
ஆராயமளவில் |
எனக்கு மற்று ஒர் நிலை இல்லை |
– |
அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை. |
English Translation
With exceeding benevolence, compassion and moon-like tranquil patience, Ramanuja gave refuge to the world and taught the truth and wisdom of the Vedas. Come to think, other than contemplating his feet, I have no desire.