(2862)
கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை,என்றுன்னியுள்ளம்
நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே
வைத்தனன் என்னை இராமா னுசன்மிக்க வண்மைசெய்தே.
பதவுரை
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
மிக்க வண்மை செய்து |
– |
தமது ஒளதார்ய குணத்தை அதிகமாகக்காட்டி, |
தீய சமயம கலகரை |
– |
தீய மதங்களி லிருந்து கொண்டு கலஹஞ் செய்கிறவர்களை |
கைத்தனன் |
– |
ஒழித்துவிட்டார்; |
தூய |
– |
பரிசுத்தமான |
முறை நெறி தன்னை |
– |
வேதமார்க்கத்தை |
காசினிக்கு உய்த்தனன் |
– |
பூமியிலே ஸ்தாபித்தருளினார்; |
என்று உன்னி |
– |
என்று அநுஸந்தித்து |
உள்ளம் நெய்த்து |
– |
நெஞ்சு கனிந்து |
அவ்வன் போடு இருந்து |
– |
அந்த ப்ரிதியோடே கூடியிருந்து |
ஏத்தும் |
– |
(அவரை) ஸ்தோத்ரம் பண்ணுகிற |
நிறை புகழோரருடனே |
– |
புகழ் நிறைந்த மஹான்களோடே |
என்னை வைத்தனன் |
– |
(என்னையும் ஒருவனாக எண்ணும்படி) என்னை வைத்தருளினார். |
நிறைபுகழோருடனே வைத்தனன்: |
– |
அஸத்தக்களோடே பழகிக்கிடந்த என்னை ஸத்துக்களோட கூட்டி வைத்தார் என்னவுமாம். |
English Translation
Ramanaju placed me in the company of these who forever praise him with melting hearts that he rid the world of heretic thoughts and established the Vedic path. This is my master’s boundless grace.