(2854)

(2854)

பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்

விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை

கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே

மண்டிவந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே.

 

பதவுரை

எங்கள் இராமநுச முனி வேழம்

–

எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்தகஜமானது.

மாறன்

–

நம்மாழ்வார்

பண்

–

இசைகளாலே

தரு

–

அருளிச்செய்த

பசுந்தமிழ் ஆனந்தம்

–

செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம்

பாய்மதம் ஆய்விண்டிட

–

பெருகுமதநீராக ஒழுகப்பெற்று

மெய்ம்மைகொண்ட நல்வேதம் கொழு தண்டம் எந்தி

–

ஸத்தியவாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக்கொண்டு

குவலயத்தே

–

இப்பூமண்டலத்திலே

மணடி வந்து என்றது

–

உங்களுடைய பிழைப்பு

உங்கள் வாழ்வு அற்றது

–

உங்களுடைய பிழைப்பு போயிற்று

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குத்ஹிதவாகங்கள் பண்ணுகிற துர்வாதிகளே! இனி நீங்கள் பிழைக்க வழியில்லை யென்று நிச்சயித்துக் கொள்ளுங்கள்;

ஏன் என்கிறீர்களோ; எம்பெருமானாரென்னும் ஒரு மதயானை யானது உங்களைப் புடைப்பதாகப் பெரிய தடியை யெடுத்துக்கொண்டு எதிரிட்டு வாராநின்றது; இதற்குத் தப்பிப்பிழைக்க உங்களாலாகாது-என்கிறார்.

யானைக்கு மதநீர் பெருகுமே; இந்த ஸ்ரீராமாநுஜ கஜராஜனாக்கு எது மதநீர் என்ன; முதலடியிற் கூறுகிறார். திருவாய் மொழியின் அறுபவத்தாலுண்டான ஆநந்தஸேமே இந்தகஜராஜனாக்கு மதநீர்ப் பெருக்காம். இதனால்,எம்பெருமானார் எப்போதும் திருவாய் மொழியை அநுபவித்துக் களிப்புறுவர் என்றதாகிறது.

 

English Translation

O Polemics! Watch out! The rutted elephant called Ramanuja, -with the ichor of the sweet Pann-based Maran’s Tamil Tiruvaimoli and the hefty tusks of Vedic truths, -is running amuch everywhere.  Your lives are ended.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top