(2855)
வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது, தத்துவநூல்
கூழற்றது குற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற்றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே.
பதவுரை
|
நம் இராமாநுசன் |
– |
ஸ்வாமிஎம்பெருமானார் |
|
தந்க ஞானத்தில் |
– |
அருளின ஞானத்தினால் துர்வாதிகளுக்கு வாழ்ச்சி அற்றுப் போயிற்று; |
|
மறையவர் தம் தாழ்வு |
– |
வைதிகர்களுடைய குறை |
|
என்றும் அற்றது |
– |
இனி ஒருநாளும் இல்லாதபடியாயிற்று |
|
தாரணி |
– |
பூமண்டவமானது |
|
தவம் பெற்றது |
– |
பாக்கியம் பெற்றது; |
|
தத்துவம் நூல் |
– |
தத்வபரமான சாஸ்திரங்கள் |
|
கூழ் அற்றது |
– |
ஸந்தேஹமற நிச்சயமான பொருளைத் தெரிவிப்பவையாயின; |
|
குற்றம் எல்லாம்பதித்த குணத்கினர்க்கு |
– |
பலவகைக் குற்றங்களும் நிறைந்த ஸ்வபாவத்தையடைய ஜனங்களுக்கு |
|
ஆ நாழ் அற்றது |
– |
அந்தக் குற்றங்கள் தீர்ந்தன; |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானார் இவ்வுலகில் அவதரித்து உபதேசாதி முகத்தாலே உண்டாக்கின தத்துவஞானத்தால் பலித்த அம்சங்கள் எவையென்றால்; துர்வாதிகளுடைய வாழ்வு மாண்டது; வைதிகர்களுக்கு இருந்த ஸங்கடங்கள் அற்றுப்போயின; பூமண்டலம் மஹாபாக்கம் பெற்றது; தத்வ சாஸ்த்ரங்களில் எவ்விதமான ஸந்தேஹமும் உண்டாகாதபடி நிச்சயஞானமே உண்டாயிற்று; பாவிகளின் பாவங்களெல்லாம் தொலைந்துபோயின; அகிய இவை எம்பெருமானாரருளித்த தத்துவஞானத்தின் பயனாகத் தேறினவை – என்றாராயிற்று.
தொல்லைவாதியர் = வைதிகர்தாம் அநாதியாகவுள்ளவர்; துர்வாதிகளும் அநாதியாக உண்டோவெனில்; பயிருள்ளபோதே தொடங்கிக் களையுமுண்டாவதுபோல, பாஹ்யர் குக்ருஷ்டிகள் என்கிற வாதிகளும் பழையராகவே யுண்டென்க.
தரணி என்ற வடசொல் தாரணியென நீட்டல் விகாரம் பெற்றது. கூழ்-ஸந்தேஹம் நாழ் – குற்றம்.
English Translation
By the Knowledge imparted by Ramanuja, the contradictions of the Upanishads have been resolved, the lives of the polemics have ended, the Vedic seers have become elevated, the world has received much good, the twin karmas of faulty lives have been destroyed.
