(2854)
பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்
விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டிவந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே.
பதவுரை
|
எங்கள் இராமநுச முனி வேழம் |
– |
எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்தகஜமானது. |
|
மாறன் |
– |
நம்மாழ்வார் |
|
பண் |
– |
இசைகளாலே |
|
தரு |
– |
அருளிச்செய்த |
|
பசுந்தமிழ் ஆனந்தம் |
– |
செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம் |
|
பாய்மதம் ஆய்விண்டிட |
– |
பெருகுமதநீராக ஒழுகப்பெற்று |
|
மெய்ம்மைகொண்ட நல்வேதம் கொழு தண்டம் எந்தி |
– |
ஸத்தியவாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக்கொண்டு |
|
குவலயத்தே |
– |
இப்பூமண்டலத்திலே |
|
மணடி வந்து என்றது |
– |
உங்களுடைய பிழைப்பு |
|
உங்கள் வாழ்வு அற்றது |
– |
உங்களுடைய பிழைப்பு போயிற்று |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- குத்ஹிதவாகங்கள் பண்ணுகிற துர்வாதிகளே! இனி நீங்கள் பிழைக்க வழியில்லை யென்று நிச்சயித்துக் கொள்ளுங்கள்;
ஏன் என்கிறீர்களோ; எம்பெருமானாரென்னும் ஒரு மதயானை யானது உங்களைப் புடைப்பதாகப் பெரிய தடியை யெடுத்துக்கொண்டு எதிரிட்டு வாராநின்றது; இதற்குத் தப்பிப்பிழைக்க உங்களாலாகாது-என்கிறார்.
யானைக்கு மதநீர் பெருகுமே; இந்த ஸ்ரீராமாநுஜ கஜராஜனாக்கு எது மதநீர் என்ன; முதலடியிற் கூறுகிறார். திருவாய் மொழியின் அறுபவத்தாலுண்டான ஆநந்தஸேமே இந்தகஜராஜனாக்கு மதநீர்ப் பெருக்காம். இதனால்,எம்பெருமானார் எப்போதும் திருவாய் மொழியை அநுபவித்துக் களிப்புறுவர் என்றதாகிறது.
English Translation
O Polemics! Watch out! The rutted elephant called Ramanuja, -with the ichor of the sweet Pann-based Maran’s Tamil Tiruvaimoli and the hefty tusks of Vedic truths, -is running amuch everywhere. Your lives are ended.
