(2853)

(2853)

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்

அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்

செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்

படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!

 

பதவுரை

அறுசமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர்

–

பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள்

சிதைந்து ஒட

–

பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக

வந்து இப்படியை தொடரும்

–

இப்பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற

மிக்க பண்டிதன்

–

மஹாபண்டிதரான

இராமாநுச

–

எம்பெருமானாரே!,

பிடியை தொடரும் களிறு என்னயான்

–

யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண்யானை போல

யான்

–

அடியேன்

சீர்  பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும்

–

ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருளவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்வாமி! யானையானது தன் பேடையினிடத்துப் பெருங்காதல்கொண்டு அதனையே பின்பிற்றித் திரிவதுபோல் அடியேன் தேவரீருடைய அழகிய திருவடிகளையே அளவற்ற அபிநிவேசத் தோடு அநுவர்த்தித்துச் செல்லும்படியாக அருள்புரிய வேணுமென்று வேண்டினாராயிற்று.

 

English Translation

O Ramanuja, Great scholar! Those who swear by the heretic six schools of blinding thought run helter-skelter as you follow them on Earth! Bless that I may follow you radiant lotus feel like an elephant but follows a cow.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top