(2852)
இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி இன்றியான்இறையும்
வருந்தேன் இனியெம் இராமானுசன்,மன்னு மாமலர்த்தாள்
பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப்
பொருந்தே வரைப்பரவும், பெரியோர்தம் கழல்பிடித்தே.
பதவுரை
|
எம் இராமாநுசன் |
– |
ஸ்வாமி எம்பெருமானாருடைய |
|
மன்னா மா தாள் மலர் பொருந்தா நிலை உடை புன்மையினொர்க்கு |
– |
சிறந்த திருவடித்தாமரைகளில் சேராத ஸ்வபாவத்தையுடையவர்களான நீசர் களுக்கு |
|
ஒன்றும் நன்மை செய்ய |
– |
ஒருவிதமான உபகாரமும் செய்யாத |
|
பெரு தேவரை |
– |
பெரிய பெருமாளை போற்றுகின்ற |
|
பெரியோர் தம் |
– |
ஆழ்வானாகிற மஹானாடைய |
|
சுழல் இன்று பிடித்து |
– |
திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனானபின்பு |
|
இரு வினை பாசம் கழற்றி இருந்தேன் |
– |
புண்ணியம் பாவமென்று இரண்டு வகையான கருமபாசங்களினின்று விடுபட்டவனானேன்; |
|
யான் |
– |
இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன் |
|
இனி இறையும் வருந்தேன் |
– |
இனிமேல் கொஞ்சங்கூட வருத்தப்பட்ட மாட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்ரீ ராமநுஜ பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே ஸர்வஸ்வதாநம் பண்ணவல்ல பெரிய பெருமாளைப் போற்றா நின்ற கூரத்தாழவானை அடைந்து உஜ்ஜீவித்த அடியேனுக்கு இனி ஒரு வருத்தமும் வினையக் காரணமில்லையென்று தம்முடைய க்ருதக்ருத்யத்வத்தைக் கூறினாராயிற்று.
இருவினைப் பாசங்கழற்றி = பாவம் போலலே புண்ணியமும் பரகதிக்குப் பிரதிபந்தகம் என்பதை உணர்க. பாவம் இரும்பு விலங்கென்றும் புண்ணியம் பொன் விலங்கென்றும் சாஸ்திரங்கள் கூறும்.
English Translation
Kurattaivar worshipped Devadiraja whose abiding grace fell on all who took refuge in Ramanuja’s lotus feet. My holding on to Kurattaivar’s feet has loosened the bonds of sin over me, Now I have no sorrow.
