(2853)
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்
அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்
செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்
படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!
பதவுரை
|
அறுசமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர் |
– |
பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள் |
|
சிதைந்து ஒட |
– |
பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக |
|
வந்து இப்படியை தொடரும் |
– |
இப்பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற |
|
மிக்க பண்டிதன் |
– |
மஹாபண்டிதரான |
|
இராமாநுச |
– |
எம்பெருமானாரே!, |
|
பிடியை தொடரும் களிறு என்னயான் |
– |
யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண்யானை போல |
|
யான் |
– |
அடியேன் |
|
சீர் பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும் |
– |
ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்வாமி! யானையானது தன் பேடையினிடத்துப் பெருங்காதல்கொண்டு அதனையே பின்பிற்றித் திரிவதுபோல் அடியேன் தேவரீருடைய அழகிய திருவடிகளையே அளவற்ற அபிநிவேசத் தோடு அநுவர்த்தித்துச் செல்லும்படியாக அருள்புரிய வேணுமென்று வேண்டினாராயிற்று.
English Translation
O Ramanuja, Great scholar! Those who swear by the heretic six schools of blinding thought run helter-skelter as you follow them on Earth! Bless that I may follow you radiant lotus feel like an elephant but follows a cow.
