(1786)

(1786)

வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்,

ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு,

போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்,

ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே.

 

பதவுரை

வேதமும்

வேதஸ்வரூபியாகவும்

வேள்வியும்

யஜ்ஞஸ்வரூபியாகவும்

விண்ணும்

மேலுலகங்களாகவும்

இரு சுடரும்

சந்திரஸூர்யர்களாகவும்

ஆதியும்

ஜகத்காரண பூதகனாகவும்

ஆனான்

ஆன பெருமான்

நமக்கு

நம் திறத்திலே

அருள் தந்த ஆ

அருள் செய்தவிதம் என்னே!;

போது அலரும்

பூக்கள் மலரப்பெற்ற

புன்னை சூழ்

புன்னைமரங்களால் சூழப்பட்ட

புல்லாணி

திருப்புல்லாணியை

கைதொழுதேன்

தொழவிரும்பியவளான

நானும்

நானும்

ஓதமும்

கடலும்

உறங்காது இருந்தேன்

கண்ணுறக்கமற் றிருக்கிறோம்.

 

English Translation

The Lord who is the Vedas, the Vedic sacrifices, and the heavenly fruit of sacrifice, is the first-cause Lord, the twin orbs and all else.  See how he gave us his grace! I joined my hands to worship Pullani armid blossoming Punnai trees. I and the tossing sea have become sleepless

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top