(1786)
வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்,
ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு,
போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்,
ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே.
பதவுரை
|
வேதமும் |
– |
வேதஸ்வரூபியாகவும் |
|
வேள்வியும் |
– |
யஜ்ஞஸ்வரூபியாகவும் |
|
விண்ணும் |
– |
மேலுலகங்களாகவும் |
|
இரு சுடரும் |
– |
சந்திரஸூர்யர்களாகவும் |
|
ஆதியும் |
– |
ஜகத்காரண பூதகனாகவும் |
|
ஆனான் |
– |
ஆன பெருமான் |
|
நமக்கு |
– |
நம் திறத்திலே |
|
அருள் தந்த ஆ |
– |
அருள் செய்தவிதம் என்னே!; |
|
போது அலரும் |
– |
பூக்கள் மலரப்பெற்ற |
|
புன்னை சூழ் |
– |
புன்னைமரங்களால் சூழப்பட்ட |
|
புல்லாணி |
– |
திருப்புல்லாணியை |
|
கைதொழுதேன் |
– |
தொழவிரும்பியவளான |
|
நானும் |
– |
நானும் |
|
ஓதமும் |
– |
கடலும் |
|
உறங்காது இருந்தேன் |
– |
கண்ணுறக்கமற் றிருக்கிறோம். |
English Translation
The Lord who is the Vedas, the Vedic sacrifices, and the heavenly fruit of sacrifice, is the first-cause Lord, the twin orbs and all else. See how he gave us his grace! I joined my hands to worship Pullani armid blossoming Punnai trees. I and the tossing sea have become sleepless
