(1785)
தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு
பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன்
தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே.
பதவுரை
|
தூம்பு உடை கை வேழம் |
– |
துளையையுடையத்தான துதிக் கையையுடைய (குவலயாபீடமென்னும்) யானையானது |
|
வெருவ |
– |
அச்சமுறும்படி |
|
மருப்பு ஒசித்த |
– |
(அதன்) கொம்புகளை முறித்த |
|
பாம்பின் அணையான் |
– |
சேஷசாயியான பெருமான் |
|
கைதொழுதேன் |
– |
தொழுவதற்கு ஆசைப்பட்டவளான |
|
என் தனக்கு |
– |
எனக்கு |
|
நமக்கு |
– |
நம் திறத்தில் |
|
அருள் தந்த ஆ |
– |
அருள் செய்தவிதம் என்னே!; |
|
பூ |
– |
அழகிய |
|
செருந்தி |
– |
சுரபுன்னைமரங்கள் |
|
பொன் சொரியும் |
– |
பொன்போன்ற மலர்களை உதிர்க்குமிடமான |
|
புல்லாணி |
– |
திருப்புல்லாணியை |
|
தேம்பல் இளபிறையும் |
– |
மிக இளைய சந்திரனும் |
|
ஓர்வெம் தழல் |
– |
வெவ்விய நெருப்புப்போலுள்ளான |
English Translation
The serpent-reclining Lord plucked the tusk of the rutted elephant, See how he gave us his grace! I joined my hands to worship Pullani where serundi trees spill golden flowers. Alas, even the tender crescent Moon has become a spewer of fire for us
